This article is from May 02, 2020

காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் ஒரு முஸ்லீமா ?| முழு கதையை படியுங்கள்.

பரவிய செய்தி

இவரது உண்மையான பெயர் தாவூத் நெளஷத் கான். அதை மாற்றி தேவநாதன் என்று வைத்துள்ளனர். இவரது மனைவியும் இஸ்லாமியர் தானாம். வாரம் ஒருமுறை மாட்டுக்கறி தின்பதும் இவரது பர்சனல் மொபைல் நம்பர் இறுதியில் 786-ல் முடிவதும். இவர் சுன்ன செய்துள்ளதும் இவரால் பாதிக்கப்பட்ட பெண்ணால் உயர்நீதிமன்றம் மூலம் வெளிவந்துள்ளது.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

Facebook link | archive link 

முழு பதிவு ” நம் இந்து மதத்தை அழிக்க தான் எவ்வளவு சூழ்ச்சிகள். பிராமணர்கள் பெயரில் ஜிகாதிகள். அனைவராலும் பரவலாக பேசப்பட்ட சம்பவம். காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதன் கருவறைக்குள் காமகளியாட்டம் ஆடியது. இந்துமதத்திற்கு விழுந்த பேரிடி என்றே சொல்லலாம். அதன்பிறகு ஒழுக்கமாக வாழும் பிராமணர்களை எல்லாம் சமூகம் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்துவிட்டது. பிராமணர்கள் பற்றிய விவாதம் வரும் போதெல்லாம் தேவநாதன் விஷயத்தை சொல்லி அதற்கு மேல் பிராமணர்கள் பேச முடியாத படி வாயை அடைத்து விடுவார்கள்.

தேவநாதனை பிராமணர் சங்கத்திலிருந்து ஒதுக்கி வைத்தாலும் அவர் இனிமேல் எந்த கோவிலிலும் பணி செய்ய தடை விதித்து விட்டாலும் இன்னமும் அந்த அழுக்கை பிராமணர்கள் சுமந்து கொண்டே தான் வாழ்கின்றனர். அவ்வளவு சீக்கிரம் அது மறையாது. ஆனால் வாரம் இரண்டு பாதிரியார்களும் இஸ்லாமிய மதகுருமார்களும் இதே கற்பழிப்பு விஷயத்தில் சிக்கினாலும் அதை கண்டும் காணாமல் போய்விடுகின்றனர் சில விஷ ஜந்துக்கள். பிராமணர்கள் செய்தால் மட்டும் தான் கற்பழிப்பு. அவர்களுக்கு மட்டும் ஆண்மை இருக்கிறது என்று எண்ணுகிறார்களோ என்னவோ இந்து மத துரோகிகள்.

சரி விஷயத்திற்கு வருவோம். அஜித் நடித்த பரமசிவன் படம் பார்த்திருப்பீர்கள்.

அதில் இஸ்லாமிய தீவிரவாதி ஒருவன் சிறுவயதிலிருந்தே அய்யங்கார் வேஷம் போட்டு வேதநூல்களை எல்லாம் படித்து திருமண் இட்டு குடுமி வைத்து பஞ்சகச்சம் கட்டி அக்மார்க் அய்யங்கார் போல் நடித்து தீவிரவாதம் செய்வார். அதேபோல் தான் இந்த காஞ்சிபுரம் விஷயமும். அவரது இயற்பெயர் தாவூத் நெளஷத் கான் என்பதை தேவநாதன் என்று மாற்றி தான் ஒரு அநாதை என்றும் சிவாச்சாரியார் குடும்பத்தை சார்ந்தவனென்றும் பொய் சொல்லி காஞ்சிபுரம் பாடசாலையில் வேதம் படிக்க சென்றுள்ளார். வாத்தியாரும் சிறுவனின் மேல் பரிதாபப்பட்டு தன் வீட்டிலேயே தங்க வைத்து உபநயனம் செய்து வேதபாடங்களை உபதேசித்துள்ளார். பரம்பரை பரம்பரையாக தான் பூஜை செய்து வரும் கோவிலையும் அவர் தேவநாதனுக்கு விட்டு கொடுத்துள்ளார். இதற்கெல்லாம் மேலாக பாதிக்கப்பட்ட பெண்கள் இவர் சுன்னத் செய்துள்ளதையும் நீதிமன்றத்தில் உறுதிபடுத்தியுள்ளனர். இன்னும் என்னென்ன மர்மமெல்லாம் இருக்கோ இறைவா.

இந்த தகவல்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை (26.04.2019)அன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணையின் போது வெளிக்கொணரப்பட்டது. தகவல்களை சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் Aravind Adv அவர்களை கொண்டு உண்மை தன்மையை ஆராய்ந்தே பதிவிட்டுள்ளேன்.

நன்றி திரு மொஸாட்

தகவல் நன்றி குருபிரசாத் ஜி ”  என நீண்ட பதிவு ஒன்று கடந்த ஆண்டில் இருந்தே சமூக வலைதளத்தில் பரவிக் கொண்டே இருக்கிறது. கோவில் கருவறையில் பெண்ணுடன் தவறாக கொண்ட அர்ச்சகருக்கு முஸ்லீம் சாயமும், ஜிகாதி பட்டமும் வழங்கி உள்ளார்கள். இது குறித்து ஆராய்ந்து கூறுமாறு ஃp

உண்மை என்ன ? 

2009-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக இருந்த தேவநாதன் என்பவர் கோயில் கருவறையில் பல பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. அவரது செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸ் அவரை கைது செய்தது, நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது.

2014-ல் இந்து தமிழ் திசையில், இழுத்தடிக்கப்படும் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு : போராட்டம் நடத்தப் போவதாக மகளிர் அமைப்புகள் அறிவிப்பு ” என செய்தி வெளியாகி இருக்கிறது. 2014-ல் வழக்கில் முன்னேற்றம் இல்லை, இழுத்தப்படிக்கப்படுவதாக மாவட்டம் முழுவதும் மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.

2018-ல் பிப்ரவரி விகடன் செய்தியில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு விசாரணையின் போது தேவநாதன் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை என நீதிபதி காட்டமாக பதில் அளித்தது செய்தியாக வெளியாகி இருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தேவநாதனின் வழக்கு ஜவ்வாக இழுத்துக் கொண்டே சென்றுள்ளது.

2018-ல் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தேவநாதன் வழக்கின் விசாரணை தொடர்பாக வெளியான செய்தியை அடுத்து வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது, அவர் ஒரு முஸ்லீம், அவருக்கு சுன்னத் செய்யப்பட்டது என்பது தொடர்பாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை கிடைத்த செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது. வைரல் பதிவில் கூறுவது போன்று, 2019-ல் வழக்கு தொடர்பாக விசாரணை நடந்ததாக ஒரு செய்தி கூட இல்லை.

அஜித் குமார் நடித்த பரமசிவன் திரைப்படத்தை பார்த்த யாரோ ஒருவர் அதை மையமாக வைத்து காஞ்சிபுரம் தேவநாதன் விஷயத்தை மாற்றிகடந்த ஆண்டு முதல் வைரல் செய்து இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பொய் என ஆராய்ந்து கூற வேண்டுமா, பார்த்தாலே தெரிகிறது பொய்யான தகவல் என்று பலரும் கூற வாய்ப்புள்ளது. ஆனால், இதுபோன்ற பதிவுகளின் கமெண்ட்களில் உண்மை என நினைத்து பதில் கூறுபவர்களை பார்க்கையில், எளிதாக பொய் என அறியக் கூடிய போலிச் செய்திகளை அவர்கள் உண்மை என நினைத்துக் கொள்கிறார்கள் என்பது வேதனை. கடந்த ஆண்டில் வெளியான பதிவுடன், தற்போது தேவநாதன் மனைவியும் முஸ்லீம், மாட்டுக்கறி உண்பவர் என்ற கதையையும் இணைத்து உள்ளனர்.

தேவநாதன் போன்றவர்கள் அனைத்து மதங்களிலும் உள்ளார்கள். அவர்களை அனைவரும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களே. அதைவிடுத்து, அம்மதத்தில் உள்ள அனைவரும் அப்படியானவர்கள் என்றோ, தவறு செய்தவன் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என கூறி மக்களிடையே மதம் சார்ந்த வன்மத்தை உருவாக்க கூடாது.

அப்டேட் : 

காஞ்சிபுரம் தேவநாதன் ஒரு முஸ்லீம் என கடந்த பல ஆண்டுகளாக பரப்பப்பட்ட வதந்தியை 2021 ஆகஸ்ட் 25-ம் தேதி இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார்கள்

Archive link 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader