This article is from Feb 11, 2021

கங்கனாவிற்கு மோடியைத் தவிர மற்ற எல்லா நடிகர்களிடம் பிரச்சனை இருக்கு.. வைரலாகும் பகடி ட்வீட் !

பரவிய செய்தி

கங்கனா ரனாவத்திற்கு நரேந்திர மோடியை தவிர நாட்டின் அனைத்து நடிகர்களிடமும் பிரச்சனை உள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டு பிரபலங்கள் ட்வீட் செய்த போது ஆவேசமாக பொங்கியவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருபவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் கங்கனா ரனாவத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் மீம்ஸ், பதிவுகள் வெளியாகின.

இந்நிலையில், இந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான நசீருதீன் ஷா, ” கங்கனா ரனாவத்திற்கு நரேந்திர மோடியை தவிர நாட்டின் அனைத்து நடிகர்களிடமும் பிரச்சனை உள்ளது ” என பிரதமர் மோடியை நடிகர் எனக் குறிப்பிட்டு வெளியான பதிவு இந்திய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உண்மையில், நடிகர் நசீருதீன் ஷாவிற்கு ட்விட்டரில் அதிகாரப்பூர்வ பக்கமே இல்லை. அவரின் பெயரை பயன்படுத்தி போலியான பக்கத்தை நடத்தி வருவதாகவும், அவர் ட்விட்டரில் இல்லை என அவரின் மனைவி ரத்னா பதாக் ஷா தெரிவித்து உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Naseeruddin Shah (@naseeruddin49)

Instagram link 

கடந்த ஆண்டே நசீருதீன் தன் பெயரில் இயங்கி வரும் போலியான ட்விட்டர் பக்கம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த போலியான ட்விட்டர் பக்கத்தை 60 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள்.

ட்வீட்கள் வைரலான எதிரொலியால், @naseeruddin_shah எனும் ட்விட்டர் பக்கத்தில், நசீருதீனுக்கு தொடர்பில்லை, பகடி எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பாக, நசீருதீன் இயங்கி வரும் போலியான ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான ட்வீட்கள் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
Please complete the required fields.




Back to top button
loader