பாஸ்போர்ட்டில் கன்னட மொழியா ?

பரவிய செய்தி

கர்நாடகாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் கன்னடம் மொழியும் அச்சிடப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் மொழி இடம் பெறாமல் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் வெளியுறவுத்துறை வழங்கும் பாஸ்போர்ட்டில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் மட்டுமே இடம் பெறுகின்றன. எதற்காக மாநில மொழிகளில் பாஸ்போர்ட் அச்சிடப்படுவது இல்லை. மேலும், ஹிந்தி தெரியாத மாநிலங்களில் எதற்காக ஹிந்தி மொழியில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. ஆகையால், மாநில மொழிகளும் பாஸ்போர்ட்டில் இடம்பெற வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாஸ்போர்ட் மையங்களில் வழங்கப்படும் பாஸ்போர்ட்களில் கன்னட மொழியிலும் விவரங்கள் அச்சிடப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் தமிழ் மொழி இடம் பெறுவதில்லை என்று சமூக வலைத்தளங்களில் ஓர் பாஸ்போர்ட் புகைப்படம் பரவி வருகிறது.

கர்நாடகாவில் சித்தராமையா ஆட்சியின் போது Karnataka development authority மற்றும் சில கன்னட அமைப்புகள் சேர்ந்து மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஹிந்தி மொழி இடம் பெற்றதை நீக்கினர். KDA மற்றும் சில கன்னட அமைப்புகள் 2017-ல் கேம்பேகௌடா விமான நிலையத்தில் ஹிந்தி மொழியில் அறிவிப்பு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின் அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு மூன்று மொழிகளில் அறிவிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில் வழங்கப்படும் பாஸ்போர்ட் குறித்து தன் கோரிக்கையை முன் வைத்த சித்தராமையா, “ கர்நாடகாவில் உள்ள அனைத்து பிராந்திய பாஸ்போர்ட் அலுவலங்களில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் இருக்கும் விவரங்கள் அனைத்தும் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. பாஸ்போர்ட்டின் முன் பக்கம், உள்ளே உள்ள விவரங்கள் மற்றும் ஸ்டாம்ப் உள்ளிட்ட அனைத்திலும் ஆங்கிலம் உடன் கன்னட மொழி இடம் பெற வேண்டும். நமது மொழி மற்றும் அடையாளத்தை காப்பது நமது கடமை” என்றும் கூறியிருந்தார்.

ஆனால், கன்னட மொழி இந்திய பாஸ்போர்ட்டில் இடம் பெற்று விட்டது என்றுக் கூறுவது தவறான செய்தி. கோரிக்கை மட்டுமே வைக்கப்பட்டது.

மாநில மொழிகள் ஏன் இடம் பெறாது :

Advertisement

ராஜ்ய சபையில் கனிமொழி அவர்கள் பாஸ்போர்ட்டில் ஹிந்தி மொழி குறித்த கேள்வியை வெளியுறவுத்துறையிடம் எழுப்பினார்.

  1. பாஸ்போர்ட் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே அச்சிடப்படுவது ஏன்?
  2. அதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா ?
  3. ஹிந்தி தெரியாத மாநிலங்களில் உள்ள மக்கள் அவர்களின் மாநில மொழிகளில் தேர்ந்தெடுக்கலாம் தானே ?

இதற்கு வெளியுறவுத்துறையின் மாநில அமைச்சரான எம்.ஜே.அக்பர் 04.01.2018-ல் அளித்த பதில்,

  1. ஆம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே பாஸ்போர்ட் அச்சிடப்படுகிறது. பாஸ்போர்ட்டில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் ஆங்கிலத்தில் இருந்தன. இனி அந்த தகவல்களும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிட அரசு முடிவு செய்துள்ளது.
  2. ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் பாஸ்போர்ட்டில் அச்சிடுவதற்கு காரணம் ஹிந்தி இந்தியாவின் அலுவல் மொழி.
  3. ஹிந்தி தெரியாத மாநிலங்களுக்காக ஆங்கிலம் இடம்பெறுகிறது. மாநில மொழிகளில் அச்சிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

இந்திய பாஸ்போர்ட்டில் மாநில மொழிகள் இடம்பெற வாய்ப்பு இல்லை என வெளியுறவுத்துறை சார்பிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, கன்னட மொழியில் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டுள்ளது என்று கூறுவது தவறான செய்தியே.

updated : 

Archived link 

2019-லும் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் கன்னட மொழி இடம்பெற்று இருப்பதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button