கன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிபாறை dam-ல் இருந்து தண்ணீர் வரும் ஆற்றில் வில்லுக்குறி பக்கம் தண்ணிரில் இடி விழுவதை பாருங்க! Cctv capturing. Fantastic. By. Nanjil asokan

மதிப்பீடு

விளக்கம்

ன்னியாகுமரியில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வரும் ஆற்றில் விழுக்குறி பகுதியில் தண்ணீரில் இடி விழும் காட்சிகள் என ஓர் வீடியோவானது முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கி இருக்கிறது.

Advertisement

Facebook post archived link 

மேற்காணும் வீடியோவில், தண்ணீரின் மீது இடி போல் ஒரு வெளிச்சம் வர அந்த பகுதியே வெடித்து சிதறுவது சிசிடிவி காட்சியில் பதிவாகி இருப்பதாக முகநூலில் பகிர்ந்து வருகின்றனர். இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Youtube video archived link 

Advertisement

உண்மை என்ன ?

தண்ணீரின் மீது இடி விழுவதாக கூறும் பதிவின் வீடியோவில் , மேகமூட்டங்கள் இல்லை மற்றும் வீடியோவின் தொடக்கத்தில் 7-வது நொடியில் மின்னல் போன்ற வெளிச்சம் வானத்தில் இருந்து வராமல் கரையோரத்தில் இருந்து வருவதை புகைப்படத்தில் காணுங்கள்.

தமிழகத்தில் கன்னியாகுமரியில் உள்ள ஆற்றில் இடி தாக்கியதாக கூறும் வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலத்தில் பிற நாடுகளில் பரவி வைரலாகி இருக்கிறதை அறிய முடிந்தது.

மேலும், Ed Piotrowski WPDE என்பவரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் , ” இது மின்னல் தாக்கி நிகழவில்லை . அது தண்ணீருக்கு அடியில் பதிக்கப்பட்ட வெடிக்கும் இணைப்பு (detonating cord ) எரிந்து வெடிக்கிறது . இந்த வீடியோ ஆனது பின்னிஷ் வாட்டர் இன்ஜீனியரிங் கம்பெனியால் இணையத்தில் பதிவு செய்யப்பட்டது ” என 2017 ஆகஸ்ட் 5-ம் தேதி பதிவிட்டு இருக்கிறார்.

  Ed Piotrowski WPDE Facebook post archived link 

இந்த வீடியோ இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பே பதிவாகி இருக்கிறது. ஆம், 2012-ம் ஆண்டில் Rannikon Merityö என்ற பின்னிஷ்(பின்லாந்து) வாட்டர் இன்ஜீனியரிங் கம்பெனி யூடியூப் தளத்தில் ”  Driling rig , Part 3 : blasting ” என பின்னிஷ் மொழியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும், ” இந்த வீடியோவில் நாங்கள் நீர் வழித்தடத்தை ஆழப்படுத்துகிறோம் ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்

Rannikon Merityo youtube video archived link 

தண்ணீர் பகுதியில் பின்னிஷ் (பின்லாந்து) பொறியியல் நிறுவனம் வெடிக்கும் இணைப்புகளை கொண்டு நீர் வழித்தடத்தை ஆழப்படுத்த மேற்கொண்ட பணிகளின் போது எடுக்கப்பட்ட வீடியோவை மின்னல்/இடி தாக்கி நிகழ்ந்த சம்பவம் என தவறாக பரப்பி உள்ளனர்.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 2 வருடங்களுக்கு முன்பு பரவிய தவறான செய்தியை கன்னியாகுமரியில் நிகழ்ந்ததாக வதந்திகளை பரப்பி இருக்கின்றனர் என்பதை அனைவராலும் அறிந்து கொள்ள முடிகிறது.

தகவல் உதவி: திரு.தயாளன்
நமது வாசகர்

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button