கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பாய் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் கபடி விளையாடும் காட்சியில் அவரின் உடையில் ” DKV ” என சாதியக் குறியீடு இருப்பதாகவும், DKV என்பது தேவேந்திர குல வேளாளர் எனும் பிரிவு என்றும் இப்புகைப்படம் வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
#கர்ணன் DKV கொடியன்குளம் @Mari_SelvarajFC Congratulations 🎉 pic.twitter.com/gTfXwihzXu
— மருதம் (@krmoorthi) April 9, 2021
ஆனால், திரைப்படத்தில் தனுஷ் அணிந்து இருந்த டி-சர்ட் உடையில் ” DKV ” என எழுதப்படவில்லை. இடைவேளை காட்சிக்கு முன்பாக இரு ஊர்களுக்கு இடையே நடைபெறும் கபடி போட்டியில் தனுஷ் மற்றும் அந்த ஊர் இளைஞர்கள் அணிந்து இருந்த உடையில் பொடியன்குளம் என அவர்களின் கிராமத்தின் பெயர் மட்டுமே இருந்தது.
ஒருபுறம் கர்ணன் திரைப்படம் சொல்ல வரும் கருத்தை பற்றிய விவாதங்களும், பதிவுகளும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாய் இருக்க, மறுபுறம் சாதிய அடையாளத்தை ஃபோட்டோஷாப் செய்து தவறான பதிவுகளும் பரப்பவும் செய்கின்றன.
முடிவு :
நம் தேடலில், கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் அணிந்து இருந்த டி-சர்ட்டில் தேவேந்திர குல வேளாளர் என்பதை DKV எனக் குறிப்பிட்டு இருந்ததாக பரப்பப்படும் தனுஷ் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.