கர்நாடகாவில் அடித்து நொறுக்கப்பட்ட பாஜக பிரச்சார பேருந்து எனப் பரப்பப்படும் தெலுங்கானா வீடியோ!

பரவிய செய்தி
ஊழலுக்கு எதிரான கர்நாடகா மக்களின் ஆவேசம் காலி நாற்காலிகளை வைத்து மாநாடு நடத்திய பாஜக, பொதுமக்களின் அதிருப்தியை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பா.ஜ., வேட்பாளர்கள் மட்டுமின்றி, பா.ஜ.,வின் பிரசார வாகனத்தை பார்த்தாலும், மக்கள் வெறுப்பும், ஆவேசமும் அடைந்துள்ளனர்.
மதிப்பீடு
விளக்கம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டசபையின் தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 10 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் தனித்தனியாக களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கர்நாடகாவில் கடந்த 2018ல் பாஜக தன்னுடைய தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால், காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் இணைந்து ஆட்சி அமைத்தன. ஆனால் 2019ல் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் கட்சி தாவியதால் மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2023 கர்நாடகா சட்டசபை தேர்தல் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அங்கு பாஜக பிரச்சார பேருந்து ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதாகவும், பாஜகவினர் பிரச்சாரத்திலிருந்து தப்பி ஓடியதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அடித்து நொறுக்கப்பட்ட பாஜக பிரச்சார பேருந்து, தப்பி ஓடிய பாஜக வேட்பாளர்கள்
ஊழலுக்கு எதிரான கர்நாடகா மக்களின் ஆவேசம் 👆🏼🤷🏻♂️😁😀💪🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼😊☺️🥰😍😁 pic.twitter.com/312M94cUlC— KannappanDMK (@KannappanDMK2) April 24, 2023
மேலும் அந்தப் பதிவுகளில் “ஊழலுக்கு எதிரான கர்நாடகா மக்களின் ஆவேசம் காலி நாற்காலிகளை வைத்து மாநாடு நடத்திய பாஜக, பொதுமக்களின் அதிருப்தியை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பா.ஜ.கவேட்பாளர்கள் மட்டுமின்றி, பா.ஜ.கவின் பிரச்சார வாகனத்தை பார்த்தாலும், மக்கள் வெறுப்பும், ஆவேசமும் அடைந்துள்ளனர்.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இந்த வீடியோ 2022 நவம்பர் 01 அன்றே சமூக வலைதளங்களில் பரவலாக பரப்பப்பட்டிருந்தது தெரிந்தது.
மேலும் அப்போது பரவிய பதிவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து பார்க்கையில், 2022 நவம்பர் 01 அன்று தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோடே சட்டமன்றத் தொகுதியில், தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளின் போது தெலங்கானாவின் ராஷ்டிர சமிதி கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது தொடர்பான செய்திகளை ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்தில் காண முடிந்தது.
The frustration & desperation of TRS over losing the Munugode By-poll is evident from the attack on Sr leader, @BJP4India National Executive Member & MLA Sh @Eatala_Rajender Garu & his wife in Munugode
I strongly condemn the attack on Smt & Sh Rajender garu & our Karyakartas
1/2 pic.twitter.com/gKUaxL3Jkl— G Kishan Reddy (@kishanreddybjp) November 1, 2022
இந்த மோதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வடகிழக்கு பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மேம்பாட்டு அமைச்சருமான கிஷான் ரெட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து “முனுகோடே இடைத்தேர்தலில் தோல்வியடையப் போவதன் காரணமாக டிஆர்எஸ்-ன் பதற்றம் மற்றும் விரக்தியை முனுகோட்டின் மூத்த தலைவரும், BJP-இன் இந்திய தேசிய செயற்குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான @Eatala_Rajender மற்றும் அவரது மனைவி மீது நடத்திய தாக்குதலிலிருந்து தெளிவாக காணமுடிகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக தேடியதில், டைம்ஸ் நவ் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் 2022 நவம்பர் 01 அன்று தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள வீடியோவைக் காண முடிந்தது.
#WATCH | A clash broke out allegedly between TRS and BJP workers, on the last day of the Munugode by-election campaign, in Telangana's Nalgonda pic.twitter.com/afCFABmY83
— ANI (@ANI) November 1, 2022
ஏஎன்ஐ செய்தியும் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. செய்திகளில் வெளியான வீடியோ மற்றும் பரப்பப்படும் வீடியோவில் தாக்கப்பட்ட பிரச்சார வாகனம் ஒன்றாக இருப்பதை காண முடிந்தது. மேலும், பரப்பப்படும் வீடியோவில் தாக்குதலில் ஈடுபடுட்டவர்கள் டிஆர்எஸ் கட்சி கொடியுடன் இருப்பதை பார்க்க முடிந்தது.
முடிவு:
நம் தேடலில், கர்நாடகாவில் அடித்து நொறுக்கப்பட்ட பாஜக பிரச்சார பேருந்து என சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ தவறானது. அது உண்மையில் 2022 நவம்பர் 01 அன்று தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நடந்த மோதலின் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.