This article is from Apr 25, 2018

குற்றவாளியா, பண முதலையா: கர்நாடகா வேட்பாளர் பட்டியல் இதோ!

பரவிய செய்தி

2018 கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 391 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில், முதலிடம் பாஜக, இரண்டாமிடம் காங்கிரஸ்.

மதிப்பீடு

சுருக்கம்

ADR ஆய்வின்படி இந்தத் தகவல் திரட்டப்பட்டுள்ளது. இதன் படி பல குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்களே வேட்பாளர்களாக உள்ளனர் .

விளக்கம்

மே 12-ம் தேதி நடக்கவிருக்கும் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற எண்ணி தேசிய கட்சிகள் அதிதீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசு சாரா அமைப்பான ADR (Association for Democratic Reforms) நடத்திய புதிய ஆய்வில், மே 12கர்நாடகா தேர்தலில் மூன்று பெரும் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் 28% சதவீத பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. 2013-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 334 பேர் குற்ற வழக்குகளை கொண்டிருந்தனர். இவ்வருடம் 391 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன என தெரியவந்துள்ளது.

கர்நாடகா தேர்தலில் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து இருப்பது,”  மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி. பாஜக கட்சியின் சார்பில் போட்டியிடும் 224 வேட்பாளர்களில் (37 சதவீதம்) 83 பேர் குற்றப் பின்னணியைக் கொண்டவர்களாக உள்ளனர் “. இதில், ஆளும் காங்கிரஸ் கட்சி 59 வேட்பாளர்களை கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களான 220 பேரில் 26% பேர் குற்ற வழக்கு கொண்ட வேட்பாளர்கள். மேலும், ஜனதா தளம் கட்சியில் 41 (20%) பேர் குற்ற வழக்குகளை எதிர் கொள்கின்றனர். சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடும் 1090 பேரில் 109 வேட்பாளர்களும் குற்ற வழக்குகளை கொண்டுள்ளனர்.

ADR ஆய்வானது 2018-ம் தேர்தலுக்கு 2560 வேட்பாளர்களால் அளிக்கப்பட்ட ஆணையப் பத்திரத்தில் 391 பேர் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் பற்றி அளித்த ஒப்புதலின்படி நிகழ்த்தப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி தீவிர குற்ற வழக்குகள் பற்றி கூறுகையில், மொத்த வேட்பாளர்களில் 254 பேர் தீவிர குற்ற பின்னணி கொண்டவர்கள் என ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த பட்டியலிலும் பாஜக கட்சியே முதலிடத்தில் உள்ளது. பாஜக வேட்பாளர்களில் 58(26%) பேர் தீவிர குற்ற வழக்குகளை கொண்டு தேர்தலில் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியில் 32 (15%) பேரும், ஜனதா தளத்தில் 29 (15%) பேரும் தீவிர குற்ற வழக்குகளை கொண்டுள்ளனர்.

குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் 391 பேர்
தீவிர குற்ற வழக்குகள் கொண்டவர்கள் 254 பேர்
கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்  4 பேர்
தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கில் தொடர்புடையவர்கள்  25 பேர்
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் கொண்டவர்கள்  12 பேர்
குற்ற வழக்குகள் கொண்ட சுயேட்சை வேட்பாளர் 109 பேர்

 

2013 ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் 2018 தேர்தலில் குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ADR ஆய்வில், கர்நாடகாவில் 56 தொகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு தொகுதிகளில் உள்ள மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இந்த எச்சரிக்கை தொகுதியில் அடங்கும் கோலார், கோப்பல் போன்ற தொகுதியில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் மீதும் வழக்குகள் உள்ளன. போட்டியிடும் வேட்பாளர்களில் 447 பேர் 5 கோடிக்கும் அதிகமான சொத்துகளை கொண்டுள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக கோவிந்தராஜநகர் தொகுதியில் போட்டியிடும் பிரியா கிருஷ்ணா 1,020 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

மாற்றம் தரும் கட்சிகள் என பிரச்சாரம் செய்யும் கட்சிகள் குற்றப் பின்னணி ஆட்களை தேடித் தேடி வாய்ப்பு வழங்கியுள்ளது . கர்நாடகா தேர்தல் நமக்கும் முக்கியமே ஏனெனில் இவர்களிடம் தான் காவிரி பெறப் போகிறோம் (!?)

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader