This article is from Nov 14, 2018

கர்நாடகாவில் மசூதிக்குள் இந்துக் கோயில் இருந்ததா ?

பரவிய செய்தி

மதிப்பீடு

சுருக்கம்

ரெய்சூரில் சாலை விவாக்க பணிக்காக இந்து கோயில், மசூதி உள்ளிட்ட பல கட்டடங்கள் இடிக்கப்பட்டன. மசூதிக்குள் கோயில் இல்லை.  இந்த படத்தில் இருப்பது ஒருவரின் டிஜிட்டல் தொழில்நுட்ப படைப்பாகும்.

விளக்கம்

கர்நாடகா மாநிலத்தின் ரெய்ச்சூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக பள்ளிவாசலை இடித்த போது மறைக்கப்பட்ட தேவி ஆலயம் வெளி வந்துள்ளது. இந்துக் கோயிலை மறைத்து அதன் மீது மசூதி கட்டப்பட்டது என பலரும் கண்டனப் பதிவுகள் வெளியிடுவதைக் காண முடிகிறது.

கோயில் புகைப்படம்

பிரம்மாண்டமான கோயில் பற்றி தேடுகையில் சீனாவில் உள்ள ஹெனான் பகுதியில் இருக்கும் Longmen Grottoes- fengxian எனும் புத்தர் கோயில் படங்கள் இதனுடன் ஒத்திருக்கிறது. பார்ப்பதற்கு பிரம்மாண்டமான கோயில் போன்று உள்ளது.

Longmen Grottoes- fengxian யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்து பாதுகாக்கப்படுகிறது. 

டிஜிட்டல் கிரியேஷன்

 

இப்படத்தின் தொடக்கம் எங்கே எனத் தேடுகையில் அப்படத்தின் கீழே “ Chandra colourist “ என்ற லோகோ உள்ளது. முகநூலில் Chandra colourist என்ற பெயரில் உள்ள பக்கத்தை காண முடிந்தது.

 

அதில், 2016 மே 8-ம் இதே படத்தை வெளியிட்டு அக்சயத்திரிதி வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தனர். இக்கோயில் எங்கே எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு “ தன்னுடைய டிஜிட்டல் கிரியேஷன் “ என்று பதில் அளித்து உள்ளார்.

ஆக, சீன புத்தக் கோயிலை டிஜிட்டல் கிரியேஷன் மூலம் இந்துக் கோயிலாக மாற்றியுள்ளார் Chandra colourist. ஆனால், இதனை உண்மை என நினைத்து விட்டனர்.

மசூதி இடிப்பு : 


2016-ல் ரெய்ச்சூர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரத்தில் இருந்தக் கடைகள், இந்து கோயில்கள் மற்றும் EK Minar மஸ்ஜித் எனும் மசூதி வரை பாதியளவு பகுதிகள் அரசு அதிகாரிகள் மூலம் இடிக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும், மக்கள் கற்களை வீசித் தாக்குதலும் நடத்தினர்.

” மசூதி இடிக்கப்பட்ட போது அதனுள் கோயில் இருந்துள்ளது என இணையத்தில் வதந்திகள் பரவத் தொடங்கின. EK Minar மசூதி இடிக்கப்பட்ட போது பழமையான முறையில் கட்டப்பட்ட அமைப்புகள் இருந்துள்ளன. அங்கு காணப்பட்ட தூண்களை மட்டும் வைத்துக் கொண்டு கோயில் இருந்துள்ளது என்று சில அமைப்புகள் தவறான தகவல்களை பரப்பியுள்ளனர் “

ரெய்ச்சூர் பகுதியில் மசூதிக்குள் கோயில் இருந்துள்ளது எனும் பரவும் செய்தி 2016 முதலே பரவித் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்தகைய வதந்தி மீண்டும் தமிழில் பரவத் தொடங்கியுள்ளது.

செய்திகள், படங்கள் ஆகியவற்றை வைத்து மசூதிக்குள் கோயில் இருந்தது எனப் பரவும் செய்திகள் மக்களை முட்டாளாக்கும் வீண் வதந்திகள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader