கர்நாடகா காங்கிரசின் முஸ்லீம் எம்.எல்.ஏ மாவட்ட எஸ்.பியை மிரட்டுவதாகப் பரப்பப்படும் வதந்தி

பரவிய செய்தி

ஆட்டம் ஆரம்பம். காங்கிரஸ் வெற்றி பெற்ற கர்நாடகாவில் முஸ்லீம் MLA மாவட்ட எஸ்.பி யை அழைத்து  இனி நாங்கள் செல்வதைத்தான் நீ கேட்க வேண்டும் என எச்சரிக்கை விடும் காணொளி..!  பலே..! கர்நாடகம் அடுத்த மேற்கு வங்கம். காணொளி பாரீர் மெய்யறிவுணர்வீர்..!

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முன்பே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தான் சொல்வதைச் செய்யுமாறு காவல்துறை அதிகாரியை மிரட்டுவதாக வீடியோ ஒன்றினை வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Archive link 


உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோவில் “Jaffar Hussain Meraj, MLA of Nampally in Jagtial” என்றுள்ளது. நம்பள்ளி சட்டமன்றத் தொகுதி தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ளது. அதேபோல் ஜக்டியால் மாவட்டமும் தெலங்கானாவில்தான் அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் கூறுவது போல் அது கர்நாடகா மாநிலம் அல்ல. மேலும், ஜாபர் உசேன் மெராஜ் AIMIM (All India Majlis-e-Ittehadul Muslimeen) என்னும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்.

இதனைத் தொடர்ந்து கீவேர்ட்களை கொண்டு இணையத்தில் தேடியதில், ‘Deccan Chronicle’ ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றில் பரவக் கூடிய நிகழ்வின் படம் இருப்பதைக் காண முடிந்தது.

அச்செய்தியில், உள்ளூர் பேருந்தில் இருக்கை தொடர்பான தகராற்றில் ஒரு பெண் மற்றும் அவரது தாயைக் காவல் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார். பின்னர் அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Archive link 

காவல் அதிகாரி பெண்களைத் தாக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதாக 2023, மே மாதம் 10ம் தேதி ஜக்டியால் காவல் கண்காணிப்பாளரின் டிவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளான மே 11ம் தேதி, சட்டமன்ற உறுப்பினர் ஜாஃபர் ஹுசைன் மெராஜ் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து, அக்காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

Archive link  

பேருந்தில் தாக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஜாபர் உசேன் மெராஜ், மற்றும் AIMIM கட்சியின் தலைவர்கள் சந்தித்து, மேற்கொண்டு  காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்த செய்திகளும் வெளியாகியுள்ளன. 

இச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர் அனில் குமார் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் ஜக்தியாலில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

தெலங்கானா ஜக்டியால் மாவட்டத்தில் இரண்டு இஸ்லாமியப் பெண்களை காவல் அதிகாரி தாக்கியதைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜாஃபர் ஹுசைன் மெராஜ் என்ற தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் காவல் கண்காணிப்பாளரிடம் பேசியதைத் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க : கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாகப் பரப்பப்படும் வதந்தி !

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற பிறகு இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் கொடியை பறக்கவிட்டதாகவும், முஸ்லீம் வேட்பாளருக்கு போலி வாக்குகள் செலுத்தி வென்றதாகவும் பொய் செய்திகள் பரப்பப்பட்டன. அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : கர்நாடகாவில் காங்கிரசின் முஸ்லீம் வேட்பாளருக்கு போலி வாக்கு செலுத்தி வென்றதாகப் பரப்பப்படும் வதந்தி !

முடிவு : 

நம் தேடலில், கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர் காவல் கண்காணிப்பாளரை மிரட்டுவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது தெலங்கானாவில் காவலரால் இரண்டு பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி எம்எல்ஏ ஜாஃபர் ஹுசைன் மெராஜ் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து பேசும்போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button