கருவறையில் இயேசு, மேரி படத்தை வைக்க பெண் எஸ்.பி வற்புறுத்தலா ?

பரவிய செய்தி
ஆஞ்சநேயர் கோவில் கருவறையில் ஏசு மற்றும் மேரியின் படங்களை வைத்து பூஜை செய்ய வற்புத்தியை பெண் SP ? உயர் அதிகாரியின் மதவெறி செயலால் கொதித்து போயுள்ள கர்நாடக மக்கள்.
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகாவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இயேசு மற்றும் மேரியின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்ய பெண் எஸ்.பி ஒருவர் வற்புறுத்தியதாக மேற்காணும் புகைப்படம் பல்வேறு மொழிகளில் வெறுப்புணர்வு கருத்துக்களுடன் பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்ள தீர்மானித்தோம்.
வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது கர்நாடகாவின் சமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வீரஆஞ்சநேய கோவிலாகும். அனைத்து மத நம்பிக்கைக் கொண்ட மக்களும் தொடர்ந்து வழிபாடு செய்யும் இடமாக இக்கோவில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ந்த நேரத்தில் இக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று உள்ளது. அப்போது மாவட்ட எஸ்பி அந்த தாலுக்கா பகுதியில் நிகழ்ந்த வெள்ள நிவாரண பணியில் இருந்த போது மக்கள் அவரை கோவிலுக்கு அழைத்துள்ளனர். அவர் ஒரு கிறிஸ்தவர். கோவிலுக்கு வந்த சிறப்பு விருந்தினருக்கு இந்து தெய்வங்களின் புகைப்படங்களை பரிசாக வழங்கப்பட்ட போது, எஸ்.பி கிறிஸ்தவர் என்பதால் கோவில் அர்ச்சகர் இயேசுவின் புகைப்படத்தை பரிசாக அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கர்நாடகா மாநில போலீஸ் தவறான தகவலை நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்து உள்ளது. கோவிலுக்கு வருகை தந்த பெண் எஸ்.பி கிறிஸ்தவர் என்பதால் அவருக்கு இயேசு புகைப்படத்துடன் இந்து தெய்வங்களின் புகைப்படமும் பரிசாக அளிக்கப்பட்டு உள்ளது. அவர் எந்த புகைப்படத்தையும் எடுத்துச் செல்லவில்லை மற்றும் இயேசு புகைப்படத்தை வைத்து பூஜை செய்ய அர்ச்சகரை வற்புறுத்தவும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களுடன் பரவி வருவதாகவும், கோவிலின் அர்ச்சகர் விளக்கம் அளித்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
See the way he Apologises….
Even his Apology looks Hollow…..#WakeUpHindus . It’s Now or NEVER…..
P. S : This Purohita/ Archaka has a Certain History…..😎#AyodhyaRamMandir pic.twitter.com/866bbM7jM0
Advertisement— D A (@diwakaran_a) August 10, 2020
கோவிலின் அர்ச்சகர் விளக்கம் அளித்த வீடியோவும் ட்விட்டர் உள்ளிட்டவையில் தவறாக பரப்பப்பட்டு வருகின்றன. கோவிலைச் சேர்ந்தவர்களே இயேசு கிறிஸ்து புகைப்படத்தை வழங்க முடிவெடுத்தோம். எஸ்.பி என்னை வற்புத்தியதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை. இந்த புகைப்படம் எந்தவொரு இந்துவின் மனதையும் புன்படுத்தி இருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என கோவில் அர்ச்சகர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
தவறாக புரிந்து கொள்தல் மற்றும் திட்டமிட்ட செயலால் கர்நாடகா கோவிலில் நிகழ்ந்த சம்பவம் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.