இந்தியாவின் செனாப் பாலத்தில் நடத்தப்பட்ட இரயில் சோதனை ஓட்டம் எனப் பரப்பப்படும் சீனா வீடியோ

பரவிய செய்தி
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் நதியில் உதம்பூர்-ஸ்ரீ நகர்- பாரமுல்லா இரயில் இணைப்பில் கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான இரயில் பாதையில் மார்ச் 21 தேதியன்று வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
மதிப்பீடு
விளக்கம்
ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் பள்ளத்தாக்கு பகுதியில் கட்டப்பட்ட இரயில் பாதையில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின் காட்சி எனக் கூறி 28 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் ஆர்பி சிங் என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
உலகின் மிக உயரமான ரெயில் பாலத்தில் சோதனையோட்டம் வெற்றி:
ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்முவில் பாயும் சீனாப் நதியின் குறுக்கே (பக்கல் – கௌரிக்கு) அமைக்கப்பட்டுள்ள இணைப்புப் பாலத்தில் ரெயில் சோதனை ஓட்டம் மார்ச் 21 ஆம் தேதியன்று வெற்றி கரமாக இயக்கப்பட்டது. pic.twitter.com/N4HJjf5Bl7
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) March 25, 2023
Congratulations India!!!
Successful small train test run was conducted on 21 March on world’s highest railway track under construction on Udhampur-Srinagar-Baramulla rail link on Chenab river in JammuAndKashmir pic.twitter.com/zL7EtIfm6z
— Murugan V P (@tractorvp) March 26, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து தேடுகையில், அந்த வீடியோ 2022 ஜூன் 27ம் தேதி அன்தன்(Andan) எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ‘Beipan River Bridge, Guizhou’ எனும் தலைப்புடன் பதிவிடப்பட்டு இருக்கிறது.
2017ம் ஆண்டு ஆஜ் டாக் யூடியூப் சேனலில், காஷ்மீரில் செனாப் ஆற்றில் இந்திய இரயில்வே கட்டி வரும் உலகின் மிக உயரமான இரயில்வே பாலம் என வெளியிட்ட செய்தியில், சீனாவில் 275 மீட்டர் நீளமுள்ள ‘ஷூபாய் இரயில் பாலம் “ என இப்படத்தை காண்பித்து உள்ளனர். இதை உலகின் மிக உயரமான இரயில் பாலமாகக் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
2020ல் தூர்தர்சன் செய்தியின் ஃபேஸ்புக் பக்கத்தில், இந்தியாவின் செனாப் பாலத்தின் கட்டுமானம் குறித்து வெளியிடப்பட்ட வீடியோவில், சீனாவின் பீபான் நதியில் மேல் செல்லும் ஷூபாய் பாலத்தின் படம் இடம்பெற்று இருக்கிறது. அதில், சீனாவில் 275மீ உயரத்தில் உள்ள தற்போதைய மிக உயரமான பாலம் என்றும், செனாப் பாலம் தரையில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
2023 மார்ச் 26ம் தேதி செனாப் பாலத்தின் மீது நடத்திய சோதனை ஓட்டத்தில் இரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்திய இரயில்வே துறையின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளன.
Pioneering the first run of track mounted vehicle on the Chenab Bridge, Hon’ble MR Shri @AshwiniVaishnaw inspects the Udhampur-Srinagar-Baramulla Rail Link project from Chenab bridge-Dugga. pic.twitter.com/8pJFcuj2JO
— Ministry of Railways (@RailMinIndia) March 26, 2023
After the first trial run of the track mounted vehicle, the Chenab Bridge will soon be operational for one of the most magnificent train journeys in the future. pic.twitter.com/S7xbGHPN0U
— Northern Railway (@RailwayNorthern) March 26, 2023
மேலும் படிக்க : பாஜக தலைவர்கள் பகிர்ந்த நொய்டா விமான நிலைய வீடியோவில் சீனா, தென் கொரியா படங்கள் !
முடிவு :
நம் தேடலில், ஜம்மு காஷ்மீரில் செனாப் நதி பகுதியில் கட்டப்பட்ட உலகின் மிக உயரமான இரயில்வே பாலத்தில் நடத்திய சோதனை ஓட்டம் எனப் பரப்பப்படும் வீடியோ சீனாவைச் சேர்ந்த ஷூபாய் பாலத்தைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.