குரோர்பதி நிகழ்ச்சியில் பாஜகவின் பொய் பிரச்சாரத்தால் ரூ7.5 கோடியை இழந்ததாகப் பரவும் எடிட் செய்த வீடியோ !

பரவிய செய்தி
பாஜகவின் போலிப் பிரச்சாரத்தால் இந்த நபர் ₹ 7.5 கோடி இழந்துள்ளார். மகாகாள் வழித்தடத்தை காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முதல்வராக இருந்தபோது கட்டினார். பாஜகவின் பொய்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் . இவர் ஏழரை கோடியை தவறவிட்டது போல் நீங்கள் நிறைய வாழ்க்கையில் இழப்பீர்கள்..
மதிப்பீடு
விளக்கம்
நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான குரோர்பதியில், பாஜகவின் போலிப் பிரச்சாரத்தால் போட்டியாளர் ஒருவர் ₹ 7.5 கோடியை இழந்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் அப்பதிவுகளில் “மகாகாள் வழித்தடத்தை காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முதல்வராக இருந்தபோது கட்டினார். பாஜகவின் பொய்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். இவர் ஏழரைக் கோடியை தவறவிட்டது போல, நீங்கள் நிறைய வாழ்க்கையில் இழப்பீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிந்தது.
பாஜகவின் போலிப் பிரச்சாரத்தால் இந்த நபர் ₹ 7.5 கோடி இழந்துள்ளார்.
மகாகால் காரிடர் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஜி முதல்வராக இருந்தபோது கட்டினார், ஆனால் இது மோடி மற்றும் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரால் கட்டப்பட்டது என்ற தொடர்ச்சியான பொய்கள் மற்றும் போலி #BJPFailsIndia
1/2 pic.twitter.com/EErOd7NYgv
— SaveTheNation/தேசம் காப்போம் (@niayayakkural) September 10, 2023
பாஜகவின் போலிப் பிரச்சாரத்தால் இந்த நபர் ₹ 7.5 கோடி இழந்துள்ளார்.
மகாகால் வழித்தடத்தை காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முதல்வராக இருந்தபோது கட்டினார், சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரால் கட்டப்பட்டது என்ற போலி பிரச்சாரத்தால், அவர் அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து தோல்வியடைந்தார். pic.twitter.com/n35sIRMVGL
— Karnan Ramamurthy-வாழப்பாடி இரா கர்ணன் (@rkarnan) September 10, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ குரோர்பதி நிகழ்ச்சியின் 14-வது சீசனில் ஷாஷ்வத் கோயல் என்ற நபர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.
மேலும் 1:21:30 மணி நேரம் கொண்ட இந்த வீடியோவின் முழு தொகுப்பினை ஆய்வு செய்ததில், பரவி வரும் வீடியோவில் உள்ளவாறு மகாகாள் லோக் குறித்த கேள்வி, இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படவில்லை.
ரூ 7.5 கோடிக்கான கேள்வியானது, வீடியோவில் சரியாக 1:11:42 மணி நேரத்தில் ஒளிபரப்பாகிறது. அதில் “இந்தியாவுக்கு முதல் சேவையாக இருந்த எந்த பிரிட்டிஷ் ராணுவப் பிரிவுக்கு ‘ப்ரிமஸ் இன் இண்டிஸ்’ என்ற முழக்கம் வழங்கப்பட்டது?” என்ற கேள்வி கேட்கப்பட்டிருப்பதையும், அதற்கு அந்த நபர் தவறாக பதிலளித்துள்ளதையும் காண முடிந்தது. ஆனால் அதில் “உஜ்ஜயினியில் அமைந்துள்ள மகாகாள் லோக்கை எந்த அரசாங்கம் கட்டியது?” என்ற கேள்வி கேட்கப்படவே இல்லை.
இந்த வீடியோவை சிலர் தவறாக எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை நம் ஆய்வின் முடிவில் அறிய முடிகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஷாஷ்வத் கோயல், ரூ 7.5 கோடியை இழந்தது குறித்து “கேபிசி 14: ஷாஷ்வத் கோயல் ரூ. 7.5 கோடி கேள்விக்கு பதிலளிக்கத் தவறி, ரூ.75 லட்சத்துடன் வீடு திரும்பினார்” என்ற தலைப்புடன் நியூஸ்18 கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இறுதியாக கேட்கப்பட்ட கேள்வி இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க: மெஹந்தியில் UPI QR குறியீடு மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ !
மேலும் படிக்க: கடலுக்கு அடியில் காட்சி தரும் துவாரகை எனப் பரவும் அனிமேஷன் வீடியோ !
முடிவு:
நம் தேடலில், அமிதாப்பச்சனின் குரோர்பதி நிகழ்ச்சியில் பாஜகவின் போலிப் பிரச்சாரத்தால் போட்டியாளர் ஒருவர் தவறான பதிலைக் கூறி ரூ7.5 கோடியை இழந்ததாகக் கூறி பரவி வரும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.