ஆம்புலன்சில் அனுமான் ஸ்டிக்கர் இருந்ததால் கிறிஸ்தவ தம்பதி ஏற மறுத்து இறந்ததாக போலிச் செய்தி !

பரவிய செய்தி

கேரளாவில் அவசர உதவிக்கு வந்த ஆம்புலன்ஸ்-யில் அனுமான் ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததை ஏற மறுத்து கிறிஸ்தவ தம்பதிகள் பின்னர் உயிரிழப்பு

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கேரளாவில் அவசர உதவிக்காக வந்த ஆம்புலன்ஸ் ஒன்றில் அனுமான் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததால் கிறிஸ்தவ தம்பதிகள் ஏற மறுத்துள்ளனர், பின்னர் அவ்விருவரும் உயிரிழந்து உள்ளதாக ஆம்புலன்ஸ் புகைப்படத்துடன் கூடிய Inshorts செய்தியின் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Twitter link | Archive link 

இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த செய்தி உண்மையான என கேட்டு அந்த ஸ்க்ரீன்ஷார்டை பதிவிட்டு இருந்தனர். தற்போது அந்த ட்வீட் நீக்கப்பட்டு இருக்கிறது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் ஸ்க்ரீன்ஷார்ட் பக்கத்தில், ” Kerala Couple Refuse Ambulance With Hanuman sticker, dies ” எனும் தலைப்பில், ஆக்சிஜனுக்காக மூச்சுத் திணறிக் கொண்டிருந்த எம்.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி ஜெய்சீ காவி நிற அனுமான் ஸ்டிக்கரை பார்த்து ஆம்புலன்சை ஏற்க மறுத்து விட்டனர். சிறிது நேரத்திலேயே அவ்விருவரும் இறந்ததாக நேரில் பார்த்தவர் தெரிவித்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டதாக இடம்பெற்று இருக்கிறது.

Advertisement

” Kerala Couple Refuse Ambulance With Hanuman sticker, dies ” எனும் தலைப்பை வைத்து தேடுகையில் அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை என அறிய முடிந்தது. புகைப்படத்தை தனியாக எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மே 10-ம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் மற்றொரு செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

புகைப்படத்திற்கு கீழே, ” 2021 மே 8-ம் தேதி பெங்களூரின் புறநகரில் செயல்படாத குவாரிக்குள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட திறந்தவெளி தகன பகுதியில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடலை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் எடுத்துச் செல்கின்றனர் ” எனக் கூறப்பட்டுள்ளது. 

அம்புலன்சில் ” prasanna ” என எழுதப்பட்டு இருக்கும் பெயரை Prasanna ambulance service எனத் தேடுகையில், அது பெங்களூரில் உள்ள ஆம்புலன்ஸ் சேவை மையம் எனத் தகவல் கிடைத்தது.

Inshorts தளத்தில், வைரல் செய்யப்படும் செய்தி போன்று எந்த செய்தியும் இடம்பெறவில்லை. அதுமட்டுமின்றி, inshorts தளத்தில் இருப்பது போன்று தலைப்பு மற்றும் எழுத்து வடிவங்களில் வேறுபாடுகள் இருப்பதை காண முடிந்தது.

முடிவு :

நம் தேடலில், கேரளாவில் அவசர உதவிக்கு வந்த ஆம்புலன்சில் அனுமான் ஸ்டிக்கர் இருந்ததால் ஏற மறுத்த கிறிஸ்தவ தம்பதிகள் உயிரிழந்ததாக பரவும் செய்தி உருவாக்கப்பட்ட போலிச் செய்தி.

கர்நாடகா பெங்களூரில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அங்கிருந்த ஆம்புலன்சில் அனுமான் ஸ்டிக்கர் பதிவாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தை எடுத்து மதம் சார்ந்த போலிச் செய்தியை உருவாக்கி பரப்பி இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button