கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நடிகர் விஜயின் ” மாஸ்டர் ” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் மற்ற கேரள நடிகர்கள் புகைப்படத்துடன் விஜயின் புகைப்படம் வைக்கப்பட்டு இருப்பதாக மீம்ஸ் பகிரப்பட்டு வருவதை பார்க்க முடிந்தது.
வைரலாகும் புகைப்படத்தில் நடிகர்கள் புகைப்படத்துடன் பிரதமர் மோடியின் ஓவியப் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. அதேபோல், புகைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் பகுதி அலுவலகம் போன்று இல்லை, விற்பனை கடை போன்று அமைந்திருக்கிறது.
Our #ThalapathyVijay’s art kept at the Kerala Crafts Village, in Vellar, near Kovalam. ❤️#MasterFilm #MasterPongal pic.twitter.com/Fz6haLezIM
— Actor Vijay FC (@ActorVijayFC) January 17, 2021
புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” கோவளம் அருகே வெள்ளார் பகுதியில் கேரளா கைவினை கிராமத்தில் தளபதி விஜய் ஓவியம் ” எனக் குறிப்பிட்டு நடிகர் விஜயின் ரசிகர் ட்விட்டர் பக்கமொன்றில்இப்புகைப்படம் பகிரப்பட்டு உள்ளது.
Inaugurated the Kerala Arts & Crafts Village, in Vellar, near Kovalam. It is an evolving ecosystem to promote arts, crafts and artisans. @kacvkovalam will be an important destination in the tourism map of Kerala. pic.twitter.com/Z4K8HSnBGv
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) January 16, 2021
கோவளம் அருகே வெள்ளார் பகுதியில் கேரளா கலை மற்றும் கைவினை கிராமத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் ஜனவரி 16-ம் தேதி திறந்து வைத்துள்ளார். அங்குள்ள விற்பனை தளத்தில் நடிகர்களின் ஓவியம் வைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் onmanorama.com எனும் இணையதளத்தில் ஜனவரி 17-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜயின் ஓவியப் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானது. அது சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட கேரளா கலை மற்றும் கைவினை கிராமத்தில் இடம்பெற்ற புகைப்படம் என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.