வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கால்நடைகள்| கேரளாவில் இல்லை.

பரவிய செய்தி

கேரளாவில் வெள்ளத்தில் மிதக்கும் மாடுகள்..

archive link 1 | archive link 2

மதிப்பீடு

விளக்கம்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் மாடுகள் பல அடித்துச் செல்லப்படும் காட்சி என கீழ்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் பகிரப்படும் பதிவுகளில் வயநாடு பகுதியில் நிகழ்ந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருப்பதால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.

Advertisement

கடந்த சில தினங்களாக கேரளா மற்றும் அதை ஓட்டியுள்ள பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர், 5 மாவட்டங்களில் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவு, வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது.

வெள்ளத்தில் மாடுகள் அடித்து செல்லப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரெம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஜூலை 28-ம் தேதி மெக்சிகோவைச் சேர்ந்த lajornada எனும் இணையதளத்தில் ” Thousands of affected after the passage of ‘Hanna’; 5 dead ” என்கிற தலைப்பில் வெளியான செய்தியில் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.

மெக்சிகோ நாட்டில் உருவான வெப்பமண்டல புயல் ஹன்னாவால் கடுமையான மழைப் பொழிவு ஏற்பட்டு சாகுல்வன் நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்த நயரிட்டில் இருந்து கால்நடைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன.

Advertisement

2020 ஜூலை 27-ம் தேதி LaJornada செய்தியின் யூடியூப் சேனலில் வெளியான 1 நிமிட வீடியோவில் மாடுகள் அடித்து செல்லப்படும் காட்சியில் இடம்பெற்று உள்ளன. மெக்சிகோவில் நிகழ்ந்த சம்பவத்தை கேரளாவின் வயநாட்டில் நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள். கேரளாவில் வெள்ளத்தால் பல பகுதிகள் சேதமடைந்து, மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உண்மையான தகவல்களுக்கு பதிலாக தவறான வீடியோக்கள் வைரல் செய்யப்படுவது சரியல்ல.

முடிவு : 

நம் தேடலில், கேரளாவில் வெள்ளத்தில் மிதக்கும் மாடுகள் என வைரல் செய்யப்படும் வீடியோ கேரளாவைச் சேர்ந்தவை அல்ல, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தது என அறிந்து கொள்ள முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button