கேரளா வெள்ள மீட்பு பணியில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவதாக பரவும் படங்கள் ?

பரவிய செய்தி

எந்த RSS அமைப்பு கேரளத்தில் வளரக்கூடாது என கொன்றார்களோ..! அதே நேரத்தில் அனைவரையும் காப்பாற்றி வருகிறது. இது தான் ஆர்.எஸ்.எஸ்..! இந்திய இராணுவத்துடன் இரண்டாவது இராணுவம்…

மதிப்பீடு

விளக்கம்

கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி முன்பு இல்லாத அளவிற்கு கனமழை பொழிந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, பெரியாற்றில் உருவான வெள்ளத்தால் இடுக்கி அணை முழு கொள்ளளவை தொடும் அளவிற்கு கனமழை பொழிந்தது.

Advertisement

இதில், வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி உட்பட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் சிக்கியும் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் கேரள மாநிலம் கடுமையாக பாதிப்படைந்து மக்கள் உடமைகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பேரிடரில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இராணுவத்துடன் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக ஓர் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வைரலாக்கப்படுகிறது.

கேரளா வெள்ளத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உணவு, குடிநீர், அரிசி உள்ளிட்டவைகளை வழங்கி உதவி செய்துள்ளனர். இருப்பினும், அதை மிகைப்படுத்தி இணையத்தில் பரவும் படங்கள் பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.

Advertisement

” 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேற்கு வங்கம் மாநிலத்தின் கொல்கத்தாவில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர், பலர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும் அங்கிருந்தவர்களுக்கு உதவிகள் புரியவும் மீட்பு படையினருடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டனர் ”

சம்பவம் நிகழ்ந்த இடம் வடக்கு கொல்கத்தாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்கு சில கி.மீ தொலைவில் அமைந்ததால் சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் அமைப்பின் தொண்டர்களை மீட்பு பணிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக மனித சங்கிலி போன்று அமைந்து தேவையான உதவிகளை செய்தனர். அப்பொழுது எடுக்கப்பட்ட படங்களே இவை.

“ கொல்கத்தா சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ் விளம்பரத்திற்காகவும், அரசியல் நோக்கத்தில் செயல்பட்டதாக அம்மாநில கட்சிகள் சார்பில் குற்றம் சுமத்தப்பட்டனர். அதை அவர்கள் மறுத்தாலும், அவர்களின் விருப்பமானவர்கள் அப்படங்களை வைத்து கேரளாவில் நடந்தது என தவறான செய்திகளை பரப்பி விளம்பரம் தேடிக் கொள்கின்றனர் “.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button