இரயில் நிலையக் குடிநீர் குழாயை சிலுவை எனப் பரப்பப்பட்ட நையாண்டிப்பதிவு !

பரவிய செய்தி
காவி சொந்தங்களே, கேரளாவில் ரயில் நிலையத்தில் ஆக்ரமித்து சிலுவை நட்ட பாவாடைகள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் சிலுவை நட்டு நம்மை வம்புக்கு இழுத்துள்ளார்கள். ரயில்வே அமைச்சர் கண்ணுக்கு படும் வரை சேர் செய்யோம்.
மதிப்பீடு
விளக்கம்
ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் குழாய் அமைப்பின் புகைப்படத்தை காண்பித்து கேரளாவில் ரயில் நிலையத்தை ஆக்கிரமித்து கிறிஸ்தவர்கள் சிலுவையை நட்டதாகவும், ரயில்வே அமைச்சர் கண்ணிற்கு படும் வரை இதை ஷேர் செய்யுமாறு வெளியான பதிவை கிண்டல் செய்து பலரும் கிண்டல் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
தண்ணீர் குழாய் தொட்டிக்கும், சிலுவைக்கு வித்தியாசம் தெரியவில்லையா என பலரும் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் சங்கி, பாஜக ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால், இந்த பதிவு குடிநீர் குழாய் என தெரியாமல் வெளியிட்டது அல்ல. அது நையாண்டிக்காக பதிவிட்டதாகும். Abhiram mini எனும் முகநூல் பக்கத்தில் ஜனவரி 8-ம் தேதி வெளியிட்டப் பதிவு குமரி தகவல் உள்ளிட்ட பிற முகநூல் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. Abhiram mini முகநூல் பக்கத்தில் பாமக, பாஜக, அதிமுக கட்சி சார்ந்த கிண்டல் பதிவுகள், எதிரான பதிவுகள் பல பகிரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : மோடி ஆட்சியில் பெட்ரோலில் “டயமாட்டோல்” எனும் பொருள் சேர்க்கப்படுவதாக பரவும் நையாண்டிப்பதிவு !
நையாண்டிக்காக உருவாக்கப்பட்ட பதிவை உண்மை என நினைத்துள்ளனர். அரசியல் கட்சி, கொள்கைக்கு எதிரானவர்களுக்கு எதிராக நையாண்டிப்பதிவுகளை வெளியிடுவது சமூக வலைதளங்களில் அவ்வப்போது பார்க்க முடிகிறது.
மேலும் படிக்க : மோடி சந்திராயனில் தங்கத்தை வைத்து அனுப்பியதாக நையாண்டி பதிவு | யார் பரப்பியது ?
அந்த நையாண்டிப்பதிவுகளை உண்மை என நினைத்தும் கிண்டல் செய்வதையும், வைரல் செய்வதும் தொடர்பாக நாம் முன்பே பல கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.