குஜராத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரம் எனப் பரவும் பாலக்காடு எம்எல்ஏவின் பிரச்சார வீடியோ !

பரவிய செய்தி

குஜராத்தில் ராகுல் காந்தியின் தெரு முனை பிரச்சாரம்

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை 6700 கி.மீட்டர் தூரம் கொண்ட ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை‘ நடை பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 14 அன்று தொடங்கினார். பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் 14 மக்களவை தொகுதிகளை உள்ளிடக்கிய தனது நடைபயணத்தை கடந்த வியாழன் (மார்ச் 07) அன்று தொடங்கினார்.

இந்நிலையில் குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனைப் பிரச்சாரத்தைப் பாருங்கள் என்று கூறி 12 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கார் ஒன்று நடுவில் செல்வது போலவும், அந்தக் காரைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக, காங்கிரஸ் கொடியுடன் சேர்த்து, பல வண்ணக் கொடிகளுடன் திரண்டு இருப்பதையும் காண முடிகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது ராகுல் காந்தி குஜராத்தில் நடைபயணம் மேற்கண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.

Manorama News என்ற யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவின் முழு வீடியோ மார்ச் 10 அன்று “தேர்தலுக்காக; வடகரையை அதிர வைத்த ஷாஃபி பரம்பில் | ஷாஃபி பரம்பில் | வடகரை” என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும் கேரளாவின் வடகரா மக்களவைத் தொகுதியில் UDF கட்சியின் வேட்பாளரான ‘ஷாபி பரம்பில்’ பிரச்சாரத்தில் ஈடுபட்ட மார்ச் 10 அன்று, ராகுல் காந்தியும் குஜராத் மாநிலம் சூரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதை செய்தியின் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால், பரவக் கூடிய வீடியோ அக்கூட்டத்தில் எடுத்தது இல்லை.

மேலும் படிக்க: ஸ்மிருதி இரானியை பார்த்து ராகுல் காந்தி ‘Flying kiss’ கொடுத்ததாகப் பாஜகவினர் பரப்பும் பொய் !

மேலும் படிக்க: ராகுல் காந்தி பூணூலைக் காட்டி கவுல் பிராமணன் எனக் கூறியதாக சீமான் சொன்ன பொய் !

முடிவு:

கேரளாவின் வடகரா மக்களவைத் தொகுதியில் UDF கட்சியின் வேட்பாளரான ‘ஷாபி பரம்பில்’ தனது பிரச்சாரத்தைத் தொடங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோவை, குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனைப் பிரச்சாரம் எனத் தவறாகப் பரப்புகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader