கேரளாவில் சன்னி லியோனுக்கு திரண்ட கூட்டத்தை மோடி ஆதரவாளர்கள் எனப் பரப்பிய நையாண்டிப் பக்கம் !

பரவிய செய்தி
அவர் தனது அரசியல் தந்தை மோடிஜியைப் பார்த்தார். கொச்சி நகரம் மக்கள் நிரம்பி வழிகிறது.
மதிப்பீடு
விளக்கம்
வந்தே பாரத் இரயில் சேவை தொடக்க விழா உள்பட பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள கேரளாவிற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கேரளாவில் அளிக்கப்பட்ட வரவேற்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாஜக சார்பில் வைரல் செய்யப்பட்டு வருகின்றன.
നന്ദി കൊച്ചി! pic.twitter.com/Gip9VE52Ji
— Narendra Modi (@narendramodi) April 24, 2023
இதற்கிடையில், குருசேத்திரா எனும் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியின் வருகையால் கொச்சி நகரம் மக்களால் நிரம்பி வழிகிறது என இப்புகைப்படம் பதிவிட்டப்பட்டது.
ஆனால், இப்புகைப்படம் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி பாலிவுட் நடிகை சன்னி லியோன் கேரளாவிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம். இதை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டும் இருந்தார்.
My car in literally a sea of love in Kochi Kerala!! Thanks #fone4 pic.twitter.com/lLHTo8GyrC
— Sunny Leone (@SunnyLeone) August 17, 2017
இதையறிந்த உடன், கேரளாவில் சன்னி லியோனுக்கு கூடிய கூட்டத்தின் புகைப்படத்தை பிரதமர் மோடிக்கு கூடியதாக பரப்பி வருகிறார்கள் என விமர்சனங்கள் எழத் தொடங்கியது. திமுகவினர் உள்பட ட்விட்டர்வாசிகள் பலரும் அப்பதிவை ட்ரோல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
Shameless sanghis 🤣🤣🤦♂️https://t.co/GkKIy0grrb pic.twitter.com/M1XGKOCjzz
— இசை (@isai_) April 25, 2023
என்னடா சங்கிகளே!!! வர வர உங்க புத்தி இவ்ளோ மட்டமா போகுது…
சன்னி லியோன் கஸ்டமரை எல்லாம் ஒரே நாள்ல மோடி ஆதரவாளரா மாத்திட்டீங்க.
அட வெளங்காதவனுகளா… pic.twitter.com/OtXTQSfHGs
— Saran (@Saran69041939) April 25, 2023
உண்மை என்ன ?


மேலும், மோடி ஆதரவாளர்கள் என சன்னி லியோன் கூட்டத்தின் படத்தை தவறாகப் பரப்புவதாக Mediaone எனும் பக்கம் வெளியிட்ட பதிவையும் இப்பக்கத்தில் கிண்டல் செய்து வெளியிட்டு உள்ளனர். அந்த பதிவில் குருசேத்திரா மற்றும் திதேஷ்பக்த் ஆகியவை நையாண்டிப் பக்கங்கள் எனத் தெரியாமல் செய்தி வெளியிடுவதாகக் கமெண்ட் செய்து உள்ளனர்.
Funny how media only chose two satire pages😂
— Igba Noupc (@IgbaNoupc) April 25, 2023
மேலும் படிக்க : குஜராத் அரசு மருத்துவமனை என சிங்கப்பூர் ஓட்டலின் படத்துடன் வைரலாகும் நையாண்டிப் பதிவு !
மேலும் படிக்க : உ.பி மகளிர் பேருந்து எனப் பதிவிட்ட மேற்கு வங்க பேருந்து படம்.. ட்ரோல் செய்யப்படும் ட்ரோல் பதிவு !
இதேபோல், தமிழ்நாட்டிலும் பாஜக மற்றும் அண்ணாமலை பெயரில் இயங்கும் ட்ரோல் பக்கங்களில் வெளியாகும் பதிவுகள் உண்மை என நினைத்து பரப்பப்பட்டு வருகின்றன. அதுகுறித்த கட்டுரைகளையும் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், கேரளாவில் மோடிக்கு திரண்ட கூட்டம் என நடிகை சன்னி லியோனுக்கு திரண்ட கூட்டத்தின் புகைப்படத்தை பதிவிட்ட ட்விட்டர் பக்கம் பாஜக தொடர்பான நையாண்டி பக்கம் என்பதை அறிய முடிகிறது.