This article is from Feb 02, 2019

கேரள பள்ளிக் குழந்தைகள் குடியரசுத்தினத்தை புறக்கணித்தனரா ?

பரவிய செய்தி

குடியரசுத் தினத்தன்று கேரளாவில்  வந்தே மாதரத்தை புறக்கணித்த முஸ்லீம்கள்  பள்ளிகளில் இஸ்லாமியக் கொடியை ஏற்றியுள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

6 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் இஸ்லாமியக் கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட ஊர்வலத்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தி நீண்ட வருடங்களாகவே வதந்திகள் பரப்பப்படுகின்றன.

விளக்கம்

குழந்தைகள் பச்சை நிறக் கொடியை கையில் ஏந்திக் கொண்டு சாலையில் நடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கேரளா பள்ளியில் வந்தே மாதரத்தைப் புறக்கணித்ததாகவும், கேரள பள்ளி குழந்தைகள் இஸ்லாமியக் கொடியுடன் இருப்பதாகவும்  கூறும் இப்படத்தின் உண்மைத்தன்மை என்ன ?

இதே படத்தை 2019 குடியரசுத் தினத்தில் மட்டுமின்றி 2017 சுதந்திரத் தினத்தன்றும் பதிவிட்டு உள்ளனர். அங்கும் இதே வாசகம்.

இதற்கு பின் நோக்கி சென்றால் 2014-ல் சுதந்திரத் தினத்தை புறக்கணித்ததாகவும் பதிவிட்டுள்ளனர். அங்கும் இதே படமே !

காணொளி :

ஒரே படம் ! ஒரே வாசகம் ! நீண்ட வருடங்களாக பரவுவதைப் பார்த்தால் நிச்சயம் போலியான செய்தியாக இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வர முடியும். ஆனால், அப்படத்தின் நோக்கம் என்ன என்பதை அறிய வேண்டும் அல்லவா ?

குழந்தைகள் கையில் இருக்கும் பச்சை நிறக் கொடி கேரளாவைச் சேர்ந்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடியே ! கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அக்கட்சியின் ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.

“ இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அடுத்த தலைமுறையினர் எனக் கூறி இப்படம் IUML- VOICE OF INDIAN MUSLIMS என்ற முகநூல் பக்கத்தில் 2013 மே மாதம் 17-ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது “.

ஆக, இதுவும் வதந்தியே !

பச்சைக் கொடியை கண்டாலே உடனே பாகிஸ்தான் என்றும், முஸ்லீம் தீவிரவாத அமைப்பு என்றும் தேசப் பக்தி பொங்க பதிவிடுகின்றனர்.

படிக்க :  பச்சைக் கொடியினாலே பாகிஸ்தான் தானா ? | ராஜஸ்தான் ஊர்வல வதந்திகள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader