கேரளாவில் உடைக்கப்பட்ட வந்தே பாரத் இரயிலின் கண்ணாடி எனப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி
மலப்புரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ.. இந்தியாவின் பொக்கிஷமான வந்தே பாரத் மீது கல் எறிவதும், இந்திய இறையான்மை மீது போர் தொடுப்பதும் ஒன்று தான்… ஆகையால் வந்தே பாரத் மீது கல் எறியும் தீவிரவாதிகளை RPF ஈவு இரக்கமின்றி Shoot at Sight உத்தரவு பிறப்பித்து சுட்டு தள்ள வேண்டும்.
மதிப்பீடு
விளக்கம்
கேரளாவில் புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் இரயில் மலப்புரத்தில் செல்லும் போது கற்களை வீசி சேதப்படுத்தியதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மலப்புரத்திற்கு வந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்.
நாடு முன்னேற கூடாதுன்னு சில மர்ம நபர்கள் செய்யும் ஒழுங்கீனமான வேலை தான் இது. pic.twitter.com/Cb9xIEmZRr
— 🚩 Mahesh M 🚩 (@mahesh74391485) May 2, 2023
உண்மை என்ன ?
2023 ஏப்ரல் 25ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான முதல் வந்தே பாரத் இரயிலை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
Flagged off Kerala’s first Vande Bharat Express, which will enhance connectivity from Thiruvananthapuram to Kasaragod. pic.twitter.com/u1RqG5SoVU
— Narendra Modi (@narendramodi) April 25, 2023
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இப்புகைப்படம் கடந்த ஜனவரி மாதம் ஆந்திராவின் விசாகப்பட்டினம் பகுதியில் வந்தே பாரத் இரயில் மீது கல் எறிந்ததாக வெளியான செய்திகளில் இடம்பெற்று இருக்கிறது.
ஜனவரி 11ம் தேதி ஏஎன்ஐ செய்தி முகமையின் ட்விட்டர் பக்கத்தில், ஜனவரி19ம் தேதி விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி வந்தே பாரத் இரயிலை தொடங்கி வைக்க உள்ள நிலையில், கல் வீச்சு சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக வீடியோவையும் பதிவிட்டு உள்ளனர்.
Andhra Pradesh | Stones pelted on Vande Bharat train in Visakhapatnam which will be flagged off by PM Modi on Jan 19. Incident occurred during maintenance.
Glass pane of a coach of Vande Bharat express was damaged near Kancharapalem, Visakhapatnam. Further probe underway: DRM pic.twitter.com/JQLrHbwyJ4
— ANI (@ANI) January 11, 2023
கேரளாவில் வந்தே பாரத் இரயில் மீது கல் வீச்சு சம்பவம் நிகழ்ந்ததா எனத் தேடுகையில், மலப்புரம் மாவட்டம் திரூர் இரயில் நிலையம் பகுதியில் வந்தே பாரத் மீது கல் வீசிய சம்பவம் நிகழந்து உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
வந்தே பாரத் இரயில் தொடக்க விழாவின் போது திரூர் இரயில் நிலையம் பகுதியில் இரயில் நிறுத்தப்பட்டதாகவும், ஆனால் தற்போது அங்கு இரயில் நிறுத்தப்படுவதில்லை என எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் அங்கு கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்து இருப்பதாக மலையாள செய்தியான ஆன்மனோரமா கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும், கல்வீச்சால் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்ட புகைப்படத்தை பயணி ஒருவர் பகிர்ந்து இருப்பதாகவும் இடம்பெற்று இருக்கிறது.
மேலும் படிக்க : வந்தே பாரத் ரயிலில் ஏசியில் இருந்து தண்ணீர் ஊற்றுவதாக தவறாகப் பரவும் பழைய வீடியோ
முடிவு :
நம் தேடலில், கேரளாவில் மலப்புரத்தில் வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. ஆனால், வைரல் செய்யப்படும் புகைப்படம் கேரளாவைச் சேர்ந்தது அல்ல, ஆந்திராவைச் சேர்ந்தது என்பதை அறிய முடிகிறது.