காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியக் கொடியை அவமதிக்கும் வீடியோ இந்தியா இல்லை !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக ஜனவரி 26-ம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை அகற்றி விட்டு காலிஸ்தான் கொடியைப் பறக்க விட்டதாக வதந்திகள் பரவின.

Advertisement

அதேபோல், காலிஸ்தான் கொடியை ஏந்தி இருக்கும் சீக்கியர்களின் கூட்டத்தில் இந்திய தேசியக் கொடியை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை அவமதிப்பது போன்று எடுத்த 2.24 நிமிட வீடியோ ” Respect India Please ” எனும் தலைப்பில் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புப்படுத்தி வைரலாகி வருகிறது.

விவசாயிகள் பெயரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தேசியக் கொடியை அவமதிக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை கமெண்ட்களில் பதிவிட்டு இதன் உண்மைத்தன்மை குறித்தும் நம்மிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ?

வைரலாகும் டிக் டாக் வீடியோவில் காணப்படும் ட்ரக் மற்றும் அங்குள்ள பகுதி அனைத்தும் இந்தியாவைச் சேர்ந்தது இல்லை என தெளிவாய் தெரிகிறது. வீடியோவில் பயனர் பெயர் “amanvir_singh5” என இடம்பெற்று இருக்கிறது.

Advertisement

amanvir_singh5 உடைய டிக் டாக் கணக்கை ஆராய்கையில், அதே பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இடம்பெற்று இருந்தன. மேலும், ஜனவரி 25-ம் தேதி வெளியிட்ட வீடியோ ஒன்றில், ” 7609 Wilbur way, Sacramento, CA 95828 ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை கூகுள் மேப் மூலம் தேடுகையில், வைரலாகும் வீடியோ எடுக்கப்பட்டது அமெரிக்காவின் கலிஃபோர்னியா என்றும், வீடியோக்களில் இடம்பெற்ற பகுதியும் காண முடிந்தது.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பலரும் இந்திய தேசியக் கொடியை ஏந்திக் கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்களின் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல.

வெளிநாடுகளில் வாழும் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் இந்தியாவிற்கு எதிராக பேரணிகளை நடத்துவதும், இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் செயல்களில் அவ்வபோது ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்ததாக வதந்தி !

இதற்கு முன்பாகவும், வெளிநாட்டில் இதேபோல் இந்தியக் கொடியை அவமதிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புப்படுத்தி வைரல் செய்தனர்.

முடிவு : 

நம் தேடலில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் செயலில் ஈடுபடும் வீடியோ எடுக்கப்பட்டது இந்தியாவில் இல்லை, இதற்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் தொடர்பில்லை என அறிய முடிந்தது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button