This article is from Oct 18, 2020

குஷ்பு பாஜகவில் இணைந்த பிறகு பரப்பப்படும் வதந்திகளின் தொகுப்பு !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிறகு சமூக வலைதளங்களில் ட்ரோல் மீம்கள் வைரலாகின. ஒருகட்டத்தில் ட்ரோல் மீம்கள் எல்லைமீறிச் செல்லத் துவங்கி இருக்கிறது. இழிவான மற்றும் தகாத வார்த்தைகள் மூலம் நடிகை குஷ்பு குறித்து போலியான நியூஸ் கார்டு செய்திகள் பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த கட்டுரையில் நடிகை குஷ்பு தொடர்பாக பரவும் வதந்திகள் குறித்து பார்ப்போம்.

1. எச்.ராஜா சோர்வடைவது இல்லை : 

Archive link 

” நானே சில நேரங்களில் சோர்வடைந்தாலும் எச்.ராஜா சோர்வடைவது இல்லை ” என குஷ்பு கூறியதாக நியூஸ்7 தமிழ் முகநூல் பக்க நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. அக்டோபர் 12-ம் தேதி நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்த போது வெளியான நியூஸ் கார்டில் இப்படி தவறாக எடிட் செய்து வைரலாக்கி உள்ளனர்.

உண்மையான செய்தி :

Facebook link | Archive link  

2. எத்தனை பேரையும் தாங்கும் சக்தி கொண்டவர் – பொன்.ராதாகிருஷ்ணன்

Archive link 

குஷ்பு சாதாரண நபர் அல்ல, எத்தனை பேரையும் தாங்கும் சக்தி கொண்டவர் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்படுகிறது. அக்டோபர் 14-ம் தேதி புதியதலைமுறையில் வெளியான செய்தியில், ” குஷ்பு சாதாரண நபர் அல்ல, ஆழ்ந்து சிந்திக்க கூடிய திறமை மிக்கவர் ” என்றே பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாக வெளியாகி இருக்கிறது. அதில், தவறாக எடிட் செய்து உள்ளனர்.

உண்மையான செய்தி :

Facebook link | Archive link  

3. பாஜகவினர் தடவியது பற்றி குஷ்பு விளக்கம் 

Facebook link | Archive link

” ஒருகட்சியில் இருக்கும்போது வேறு கட்சியினர் தடவியிருந்தால் தான் தவறு. பாஜகவினர் தடவியதில் தவறில்லை ” என குஷ்பு கூறியதாக எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டு பரப்பப்பட்டு வருகிறது. அக்டோபர் 12-ம் தேதி நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தது குறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்து இருந்தார். அந்த நியூஸ் கார்டில் தவறான செய்தியை எடிட் செய்து இருக்கிறார்கள்.

உண்மையான செய்தி :

Facebook link | Archive link

செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை குஷ்பு பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் இருக்கும் நபர் குஷ்புவின் தோளில் கை வைத்து பேசுவது போன்று இருக்கும் புகைப்படத்தை வைத்து தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

மேற்காணும் புகைப்படத்தில் இருப்பவர் நடிகை குஷ்புவின் சகோதரர் ஆவார். செய்தியாளர் சந்திப்பில் குஷ்பூ பேசிக் கொண்டிருக்கும் போது அவர் அங்கு வந்து குஷ்புவின் தோளில் கை வைத்து காதில் ஏதோ கூறுவது மாலைமுரசு செய்தியில் வெளியாகி இருக்கிறது. இதையே தவறாக சித்தரித்து உள்ளனர்.

News link | Archive link 

நடிகை குஷ்பு உடன் பாஜகவில் இணைந்த மதன் ரவிச்சந்திரன், “குஷ்பு அவர்களின் கூட பிறந்த அண்ணன் தன் தங்கையை கூட்டத்தில் பத்திரமாக அரவணைத்து கொண்டு செல்லும் புகைப்படம் இவ்வளவு கேவலமாக சித்தரிக்கிறார்கள் ” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter Archive link 

4. குஷ்புவிடம் அடிவாங்கிய பாஜகவினர்  

இன்று குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய பாஜகவினர் எனக் கூறி 12 நொடிகள் வீடியோ ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வீடியோ கடந்த ஆண்டு பெங்களூர் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கு சென்ற குஷ்புவிடம் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் இருந்த நபர் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய வீடியோ என நாம் முன்பே கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

விரிவாக படிக்க : குஷ்புவிடம் பாஜகவினர் அடிவாங்கியதாக தவறாகப் பரவும் பழைய வீடியோ !

நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்த பிறகு தொடர்ந்து தவறான செய்திகளும், இழிவான வாசகங்கள் கொண்ட போலி நியூஸ் கார்டுகள் பரப்பப்பட்டு வருகின்றன.

Please complete the required fields.




Back to top button
loader