கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாகப் பரவும் பழைய வீடியோ

பரவிய செய்தி

தமிழக அரசுக்கு மானக்கேடு…ஆமாம் போக்குவரத்து துறை அமைச்சரும், காவல் துறை அமைச்சருக்கும் சண்டையா?

X Link

மதிப்பீடு

விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு காவலர் ஒருவர் அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க முடியாது என கண்டெக்டர் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வைரல் ஆனது. இதனையடுத்து போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஒருவழிப்பாதையில் வரும் அரசு பேருந்து ஓட்டுனர்களிடம் போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் வசூலிப்பதாக சமீபத்தில் வீடியோ ஒன்று பரப்பப்பட்டது. இந்நிலையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி 0:59 நிமிடங்கள் கொண்ட வீடியோ  ஒன்று சமுக வலைத்தளப்பக்கங்களில் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.

மேலும், இதன் முழு வீடியோ தந்தி டிவி யூடியூப் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 2024 அன்று “நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த மக்கள் – கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு” என்ற தலைப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், மக்களவை தேர்தலை ஒட்டி சொந்த ஊருக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்த நிலையில் போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டிருந்ததைக் காண முடிந்தது.

மேற்கொண்டு தேடியதில், இதே வீடியோ chengalpattu_vibes என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏப்ரல் மாதம் 19, 2024 அன்று பதிவிடப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது.  அதில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை என கூறி பயணிகள் போராட்டம் எனக் குறிப்பிட்டிருந்தது. 

இதிலிருந்து, இச்சம்பவம் ஏப்ரல் மாதம் நடந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது.

முடிவு :   

நம் தேடலில் ,கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை எனப் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகப் பரவும்  வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல, இது கடந்த ஏப்ரல் மாதம் நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது எனத் தெளிவாகிறது.

Please complete the required fields.
Back to top button
loader