This article is from Apr 25, 2020

கிம் ஜாங் உன் இறந்து விட்டாரா ?| வைரலாகும் புகைப்படம் யாருடையது ?

பரவிய செய்தி

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக பரவும் புகைப்படம்.

மதிப்பீடு

விளக்கம்

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலக் குறைவு காரணமாக மூளைச்சாவு அடைந்து விட்டதாக முன்பு உறுதிப்படுத்தாத தகவல்கள் பரவி இருந்தன. தற்போது கிம் ஜாங் உன் இறந்து விட்டதாகவும், அவரின் உடலை அடக்கம் செய்யும் காட்சி என ஓர் புகைப்படம் வைரல் செய்யப்படுகிறது.

Twitter link | archive link 

ஆனால், கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அப்படி பரப்பப்படும் புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட போலியான புகைப்படமே.

2012-ம் ஆண்டில் வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல் உயிரிழந்த பிறகு அவரின் உடல் காட்சிப்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கிம் ஜாங் உன் உடைய புகைப்படத்தை போட்டோஷாப் செய்து வைரல் செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க : வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மூளைச்சாவு அடைந்து விட்டாரா ?| ஆதாரமில்லா செய்திகள்.

கிம் ஜாங் உன் குறித்த உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகாத காரணத்தினால் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆதாரமில்லாத மற்றும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader