This article is from Sep 30, 2018

ஊழல் செய்த அதிகாரிக்கு மரணதண்டனையா ? வைரலாகும் வட கொரியா அதிபர் வீடியோ.

பரவிய செய்தி

ஊழல் செய்த அதிகாரிக்கு மீடியா முன்னிலையில் மரணதண்டனை அளித்த வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்.

மதிப்பீடு

சுருக்கம்

வட கொரியா மற்றும் தென் கொரியா அதிபர்களின் வரலாற்று சிறப்புமிக்க அமைதி சந்திப்பை பற்றி அறியாதவர்கள் இந்த வீடியோவை உண்மை என நினைத்து பகிர்கின்றனர்.

விளக்கம்

வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தார் என்று தான் நமக்கு தெரியும். ஆனால், அவரது நாட்டில் ஊழல் செய்த ஒரு அதிகாரி அல்லது அமைச்சருக்கு மீடியா முன்னிலையில் மரணதண்டனை வழங்கியுள்ளார் என்ற செய்தியுடன் கிம் ஒருவரை குழியில் தள்ளுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வட கொரியாவில் சட்டங்கள் கடுமையானதாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் இந்த வீடியோ காட்சியில் இருப்பது கொரிய தேசத்தின் அதிபர் என்பதே உண்மை. ஆம், தென்கொரியா அதிபருடன் கிம் ஜாங் உன் சந்தித்த நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளே இவை. அதில், மாற்றம் செய்து இணையத்தில் வைரலாக்கி உள்ளனர்.

ஏப்ரல் 27, 2018-ல் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் ஆகிய இருவரின் அமைதி சந்திப்பு உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த வரலாற்று நிகழ்வு.

2007 ஆம் ஆண்டில் இரு கொரிய நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த கூட்டறிக்கையில் அணு ஆயுதப் பிரச்சனை உள்பட பல அம்சங்கள் இடம்பெற்றன. எனினும், அதன்பின்னர் வந்த கிம் ஜாங் உன் ஆட்சியில் அணு ஆயுத சோதனை, யுத்தம் மூளும் அபாயம் என ஒரு பரபரப்பான சூழ்நிலையே நிலவியது. ஆனால், தற்போது நிகழ்ந்த சந்திப்பில் கொரிய நாடுகளிடையே இருந்த தற்காலிக போர் நிறுத்தத்தை சமாதான உடன்படிக்கையாக மாற்றி அமைதி நிலவ இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளனர்.

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் ஆகிய இருவரும் கொரிய தேசத்தின் இராணுவ எல்லை வரையறையில் சந்தித்தனர். அங்கு இரு நாட்டு எல்லைகளுக்கு இடையே இருந்த கோட்டை தாண்டி தென்கொரியா அதிபரிடம் கை குலுக்கினார் கிம் ஜாங் உன். இருவரும் இரு தேசங்களின் எல்லைக்குள் மாறி மாறி வந்து மீடியாவை சந்தித்தனர்.

இந்த வீடியோ காட்சி கிம் ஜாங் உன் தென் கொரிய அதிபரை குழியில் தள்ளி கொல்வது போன்று கேலியாக செய்த வீடியோ எடிட்டிங். அதை உண்மை என நினைத்து தமிழகம் வரை பல கதைகளுடன் அந்த வீடியோ பதிவுகள் வைரலாகி உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader