Fact Check

விவசாயிகள் நடத்திய பேரணியை இழிவுபடுத்தும் போலி ட்விட்டர் ட்ரண்டு!

பரவிய செய்தி

மும்பை போராட்டத்தை கொச்சைப்படுத்த போலியான ட்விட்டர் ட்ரென்ட் உருவாக்கியுள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

விவசாயிகளின் நீண்ட தூர பேரணி குறித்து மக்களுக்கு தவறான எண்ணத்தை தோற்றுவிக்கவும், பாஜக ஆதரவாளர்கள் #kisanThanksDevendra என்ற ஹஷ்டக் மூலம் மகாராஷ்டிரா அரசை உயர்த்தி காட்டவும் இவ்வாறு செய்துள்ளனர்.

விளக்கம்

விவசாயிகளின் கடன் தள்ளுபடி, பழங்குடியினருக்கு நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அமைப்பான பாரத் கிசான் சபாவின் மூலம் 25,000 மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து நீண்ட அணிவகுப்பை மேற்கொண்டனர். மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து தொடங்கி 180 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு மார்ச் 12-ம் தேதி மும்பையை அடைந்தது விவசாயிகளின் பேரணி.

Advertisement

விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து பொதுமக்களும் பேரணியில் சேர்ந்ததால், விவசாயிகளின் நீண்ட அணிவகுப்பு இந்தியாவையே மிரள வைத்தது. இந்த சம்பவம் ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்தது.

இந்நிலையில், 50,000 விவசாயிகள் நடத்திய பேரணி அரசியல் உள்நோக்கத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு எதிராக திட்டம் தீட்டி செயல்படுத்தி உள்ளனர். அதில் இருந்தவர்கள் விவசாயிகள் அல்ல, வறுமையில் இருக்கும் மக்களையும் ஒன்றிணைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசுக்கு எதிராக மக்களை திருப்ப எண்ணுவதால், இந்நேரத்தில் நாம் அனைவரும் அரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். அதற்கு #kisanThanksDevendra என்ற ஹஷ்டக் மூலம் அரசுக்கான ஆதரவை வைரலாக்க வேண்டும். இச்செய்தியை வைரலாக்கி மக்களின் எண்ணத்தை விவசாயிகளுக்கு எதிராக திருப்ப பாஜக ஆதரவாளர்கள் ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனுடன் 22 பக்க கூகுள் டாக்குமென்ட் இணைத்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இரவு பகல் பாராமல் விவசாய வளர்ச்சிக்காக பல கடுமையான சூழ்நிலையில் மேற்கொண்ட பேரணி பற்றி தவறான எண்ணத்தை மக்களிடையே உருவாக்கவும், தேவேந்திர பட்னாவீஸ் அரசை மேன்மைப்படுத்தி காட்டவும் #kisanThanksDevendra என்ற ஹஷ்டக்கை சமூக வலைத்தள “ IT cells ” முயற்சித்துள்ளனர். அதை சில ட்வீட் கருத்துக்கள் நமக்கு புரிய வைக்கின்றன.

“ விவசாயிகள் பிரச்சனையில் கம்யூனிஸ்ட்கள் எதற்கு திடீரென களமிறங்க வேண்டும். இதில் வடக்கு மகாராஷ்டிராவில் இருந்த விவசாயிகள் மட்டுமே பங்கேற்றது ஏன் ”

“ பேரணியில் கலந்து கொண்டவர்கள் விவசாயிகள் அல்ல ”

“ 2016-2017 நிதியாண்டில் மட்டும் விவசாயத்திற்கு 56,000 கோடி முதலீடு செய்துள்ளது மகாராஷ்டிரா அரசு ”

“ தொலைத்தூர மாவோயிஸ்ட்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் அனைவரும் வறுமையில் உள்ளவர்கள், விவசாயிகள் அல்ல. அவர்களின் கோரிக்கை காட்டில் விவசாயம் செய்ய உரிமை கேட்கின்றனர். கம்யூனிஸ்ட்களின் இப்பேரணிக்கு காங்கிரஸ், என்சிபி நிதி உதவி செய்கிறது ” # kisanThanksDevendra.

மாநில அரசுக்கு ஆதரவாக, விவசாயிகளின் பேரணியை இழிவுபடுத்த எண்ணி பயன்படுத்தப்பட்ட #KisanThanksDevendra என்ற ஹஸ்டக் அவர்களுக்கே எதிர்வினையாக மாறியது.

ஆம், வைரலாக்க நினைக்க #kisanThanksDevendra என்ற ஹஷ்டக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் கேலி செய்து மீம்ஸ் மற்றும் ட்விட்டர் கருத்துக்கள் அதிகம் பதிவிடப்பட்டது.

இதன் விளைவால் வலைத்தள தொழில்நுட்ப பிரிவினரால் ஹஸ்டக் நீக்கப்பட்டு, “ Farmers with Devendra “ என்ற ஹஸ்டக் பயன்படுத்தி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இனிமேல், இது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பு, தற்போது நிகழ்ந்த நிகழ்வை நினைத்து பார்க்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

மக்கள் போரட்டத்தை திசை திருப்பவும், தவறான எண்ணத்தை உருவாக்கவும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் வலைத்தள யுக்தியை எல்லாம் தமிழகத்தில் நடக்கும் போதே நாம் அறிந்து விட்டோம்…

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button