தனுசின் “ஒய் திஸ் கொலவெறி” பாடல் துருக்கி விளம்பர பாடலின் காப்பி என வதந்தி !

பரவிய செய்தி
பழைய துருக்கி கோக்க கோலா விளம்பரத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட கொலவெறி பாடல்.
மதிப்பீடு
விளக்கம்
3 திரைப்டத்திற்காக அனிரூத் இசையமைக்க நடிகர் தனுஷ் எழுதி, பாடிய “ஒய் திஸ் கொலவெறி” பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி உலகம் முழுவதும் கவனம் பெற்றது. அப்படிப்பட்ட பாடல் துருக்கி நாட்டின் கோக்க கோலா விளம்பரத்தின் பாடலை காப்பி அடித்து எடுக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் அந்த 2 நிமிட விளம்பரப் பாடலை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
தனுசின் “ஒய் திஸ் கொலவெறி” பாடல் 2011-ம் ஆண்டு நவம்பர் 17 சோனி மியூசிக் இந்தியாவின் யூடியூப் சேனலில் வெளியாகியது. இதற்கு பிறகே துருக்கி நாட்டின் கோக்க கோலா விளம்பர பாடல் வெளியாகி இருக்கிறது.
2015ல் கோக்க கோலா விளம்பத்திற்காக “ஒய் திஸ் கொலவெறி” பாடலின் துருக்கி வெர்சன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து campaignindia எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த விளம்பரம் கோக்க கோலாவின் யூடியூப் சேனலில் இடம்பெறவில்லை. எனினும், பிற யூடியூப் சேனல்களில் இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது. கொலவெறி பாடல் போன்று உருவாக்கப்பட்ட விளம்பர பாடல் என 2015-ல் பலரும் சமூக வலைதளங்களில் இவ்வீடியோவை பகிர்ந்து உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், பழைய துருக்கி கோக்க கோலா விளம்பரத்தில் இருந்து கொலவெறி பாடல் காப்பி அடிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. கொலவெறி பாடலை மையப்படுத்தியே துருக்கி விளம்பர பாடல் எடுக்கப்பட்டு உள்ளது .