கொல்கத்தா காளி கோவில் பூஜையை நிறுத்த சொல்லி முஸ்லீம்கள் கூச்சலிடும் வீடியோவா ?

பரவிய செய்தி
கொல்கத்தாவில் உள்ள காளி மாதா மந்திரில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் நடத்திய பூஜையில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கோவில் முன்னால் நின்று பூஜைகளை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். (அமைதி மார்க்கத்தினர்) யார் யாரை தடுப்பது.
மதிப்பீடு
விளக்கம்
மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலின் முன்பு கூடிய நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் பூஜையை நிறுத்துமாறு கூச்சலிட்டதாக 3.42 வீடியோ ஒன்று இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
Is this True
🔥Hundreds of Muslims shouting to stop Poojas at Kali Matha Mandir in Kolkata, once poojas conducted by Sri Ramakrishna Paramahamsa. They (so-called peace lovers) want to close the Mandir. What is this happening in our own country? Where are we? People of India to pic.twitter.com/Z523lgFIqG— RajiAiyer (@RajeAiyer) October 21, 2021
உண்மை என்ன ?
கொல்கத்தாவில் காளி கோவிலின் பூஜையை நிறுத்த சொல்லி முஸ்லீம்கள் போராடியதாக வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து சமீபத்திய செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. வைரல் செய்யப்படும் பதிவின் கமெண்ட்களில், இந்த வீடியோ பங்களாதேஷ் எனக் கேள்விப்பட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள்.
அதை வைத்து தேடுகையில், அக்டோபர் 16-ம் தேதி JazaKallah Media எனும் யூடியூப் சேனலில் வைரல் செய்யப்படும் காட்சிகள் அடங்கிய 4.20 நிமிட வீடியோ பதிவாகி இருக்கிறது. அதில், பெஃனியில் தொழுகைக்கு பிறகு முஸ்லீம்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே சண்டை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெஃனி ஆனது பங்களாதேஷ் நாட்டில் உள்ள நகரம். பெஃனி நகரில் உள்ள மசூதி பற்றி தேடுகையில், கூகுள் மேப் மூலம் கிடைத்த புகைப்படங்கள், வைரல் செய்யப்படும் வீடியோவில் இடம்பெற்ற பகுதியுடன் ஒத்துப் போவதை பார்க்கலாம்.
முடிவு :
நம் தேடலில், கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலின் பூஜையை நிறுத்த சொல்லி நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கூடி கூச்சலிட்டதாக பரப்பப்படும் வீடியோ உடன் கூடிய செய்தி தவறானது. அந்த வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, ப ங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.