வெயில் காரணமாக முஸ்லீம்கள் கொல்கத்தா மாலுக்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டதாக வதந்தி பரப்பும் வலதுசாரிகள் !

பரவிய செய்தி
கொல்கத்தா: காலை 10:30 மணியளவில், 200-250 அமைதியான சமூகத்தின் குடிசைவாசிகள் “வெளியே மிகவும் சூடாக இருந்த காரணத்தினால்” QuestMall-க்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் ஃபுட் கோர்ட்டில் உள்ள Armani/Gucci போன்ற கடைகளில் இருந்து இலவச உணவு மற்றும் ஈத் இலவச பரிசுகளைக் கோரினர். காவலரை அடித்துள்ளனர். இது மம்தா பானர்ஜியின் வங்காளமாக மாறிவிட்டது.
மதிப்பீடு
விளக்கம்
கொல்கத்தாவில் உள்ள ‘ராதா கோபிந்தோ சஹா லேன் மற்றும் தில்குஷா’ பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் பலர் Quest Mall-க்குள் நுழைவது போன்றும், உள்ளே படுத்து ஓய்வு எடுப்பது போன்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
#Kolkata: At 10:30 am, 200-250 peaceful community slum dwellers barged into the #QuestMall "because it is too hot outside". And then they demanded free food from Food Court, Eid free gift from Armani/Gucci etc stores. Beat up the guard. This has #MamataBanerjee turned Bengal into pic.twitter.com/sFWdhp9GGF
— Amitabh Chaudhary (@MithilaWaala) April 20, 2023
மேலும் அந்தப் பதிவுகளில், கொல்கத்தாவில் முஸ்லீம் சமூக மக்கள் Quest Mall-க்குள் நுழைந்து அங்குள்ள ஃபுட் கோர்ட்டில் இருந்து இலவச உணவு மற்றும் ஈத் இலவச பரிசுகளைக் கேட்டதாகவும், காவலரை அடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
This is the much hyped Quest Mall; Sanjeev Goenka's dream project which showcases London high street brands. Currently taken over by lungis.
Question is can Goenkas do anything about it? 🤔🤔 pic.twitter.com/N2QldSjcjZ— Keya Ghosh (@keyakahe) April 17, 2023
உண்மை என்ன?
கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதியிலிருந்தே கொல்கத்தாவில் மின்தேவை 2366 மெகாவாட்-ல் இருந்து 2503 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சமீப காலமாகவே கொல்கத்தாவின் பல பகுதிகளில் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதால் பல இடங்களில் போராட்டங்ககள் வெடிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்கையில், இந்த வீடியோவில் தொடர்புடைய புகைப்படங்களைக் கொண்ட செய்திகளை The Telegraph தளத்தில் காணமுடிந்தது.

இது தொடர்பாக மேற்கொண்டு தேடியதில், தொடர்ந்து மூன்று நாட்கள் மின்வெட்டு ஏற்பட்டதைக் கண்டித்து CESC பகுதிக்கு வெளியே மக்கள் போராட்டம் நடத்தியது தொடர்பான காட்சிகளை Halaat E Bengal என்னும் யூடியூப் சேனல் தன்னுடைய பக்கத்தில் கடந்த ஏப்ரல் 17 அன்று வீடியோவாக வெளியிட்டுள்ளது.
மேலும் Times of India செய்தியிலும், இப்பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டுள்ளது தொடர்பான செய்திகளைப் பார்க்க முடிந்ததது. இதன்மூலம் புகார்கள் அளிக்கப்பட்டும் தொடர்ந்து மின்வெட்டு பிரச்சனை நீடித்துள்ளதன் காரணமாகவே இந்த பகுதி மக்கள் Quest மாலுக்குள் சென்று ஓய்வு எடுக்க சென்றுள்ளனர் என்ற உண்மை புலப்படுகிறது.
View this post on Instagram
மேலும், இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து மால் நிர்வாகம் பரப்பப்படும் தகவலை மறுத்தும், அது அப்பட்டமான பொய் என விளக்கம் அளித்து உள்ளனர்.
முடிவு:
நம் தேடலில், கொல்கத்தாவின் மால் ஒன்றில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கும்பலாக ஓய்வு எடுப்பதாகவும், ஈத் பரிசு, உணவு கேட்டு அராஜகத்தில் ஈடுபட்டதாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அப்பகுதியில் தொடச்சியாக ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சனையின் காரணமாகவே அங்குள்ள மக்கள் அருகிலுள்ள Quest மாலுக்கு சென்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.