கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறுத்தைகள் நுழைந்ததாகப் பரவும் வதந்தி வீடியோ!

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கட்டிட பகுதியில் இரு சிறுத்தைகள் செல்லும் 26 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்றை கோவை பகுதியைச் சேர்ந்த சமூக வலைதள பக்கங்கள் மற்றும் யூடியூப் பக்கங்களில் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து தேடுகையில், 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கோவை மாவட்டம் வடவள்ளியில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழக பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், சமீபத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
வைரலாகும் சிறுத்தைகள் வீடியோவை கீஃப்ரேம்களாக எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2022 அக்டோபர் 12ம் தேதி tudodoms எனும் இணையதளத்தில் பிரேசிலின் மிரண்டாவில் உள்ள கிறிஸ்டோ ரெடேன்டோர் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள காலியான வீட்டில் இரு சிறுத்தைகள் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக போர்ச்சுகீசிய மொழியில் வெளியான கட்டுரை புகைப்படத்துடன் கிடைத்தது.
View this post on Instagram
மேலும், அக்டோபர் 09ம் தேதி dr.brunofernandesvet எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதே பகுதியை குறிப்பிட்டு வைரல் செய்யப்படும் சிறுத்தைகளின் வீடியோ பதிவாகி இருக்கிறது. ஆகவே, வைரல் செய்யப்படும் வீடியோ கோவையைச் சேர்ந்தது அல்ல எனத் தெளிவாகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.