தமிழகத்தில் ஒரே வில்லில் மூன்று அம்பு விடுவது போன்ற சிற்பம்.

பரவிய செய்தி

பாகுபலி படத்தில் இடம் பெற்ற ஒரே வில்லில் மூன்று அம்புகளை விடுவது போன்று வரும் காட்சியை போன்று 13 ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைத்துள்ளது . இவை ஆயிரம் ஆண்டுகளாக நாம் அறிந்த கலையே .

மதிப்பீடு

விளக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை தாலுக்காவில் உள்ள ஜுகூர் என்ற கிராமத்தில் அறம் வரலாறு ஆய்வு மையக் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர் . அவர்கள் ஆச்சரியத்தை எற்படுத்தக் கூடிய இரு நடுகற்களை கண்டுப்பிடித்துள்ளனர் . அந்த அபூர்வமான கற்களில் ஒரே சமயத்தில் மூன்று அம்புகளை விடும் போர் வீரனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது .

Advertisement

இந்த ஆய்வை குறித்து அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறுகையில் , ஜுகூர் என்ற கிராமத்தில் இதுவரை மூன்று நடுகற்கள் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . இந்த கற்கள் போரில் இறந்தவரின் நினைவாக நிறுவப்பட்டுள்ளன . முதலில் உள்ள கல்லில் இருக்கும் வீரன் வலது கையில் மூன்று அம்புகளை பிடித்துள்ளான் , இடது கையில் வில்லினை ஏந்தி உள்ளான் . உடலில் ஆபரணங்கள் அணிந்தும் , இடையில் ஆடையும் , இடப்புறம் சசாய்ந்த கொண்டையுடன் இருக்கும்படி சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது .

இந்த வீரனை எதிர்கொண்ட மற்றொரு வீரனின் சிற்பம் வலதுபுறம் சிறிதாக செதுக்கப்பட்டுள்ளது . அவனது கையில் இருக்கும் வாளையும் , கேடயத்தையும் பார்த்தால் கங்கர்களின் போர் வீரனாக இருக்கலாம் .  மற்றொரு நடுக்கல்லில் வலது கையில் மேல்நோக்கிய வாள் , இடது கையில் தாமரை மொட்டு போன்ற பொருள் , இடையில் கூர்வாள் , மார்பில்  ஆபரணங்கள் , மேல்பகுதியில் சந்திரன் சூரியன் போன்று செதுக்கப்பட்டுள்ளது . படத்தில் வருவது போன்று ஒரே வில்லில் மூன்று அம்புகளை விடும் அளவிற்கு இவர்கள் திறமையானவர்களாக இருந்து உள்ளனர் என்று கூறினார் .

கற்பனையான படங்களை மட்டுமே பார்த்து வியந்து வந்த நமக்கு இதுபோன்ற பண்டைய மனிதர்களின் வீரத்தை பார்க்கும் பொழுது ஆச்சரியாமாக தான் இருக்கும் . இச்சிற்பங்கள் போன்று எத்தனையோ சிற்பங்கள் இன்றளவும் மறைந்து உள்ளன . அவைகளை கண்டுபிடித்தால் பல ஆச்சரிமூட்டும் வரலாறுகள் கிடைக்க வாய்ப்புள்ளது .

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Advertisement

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button