This article is from Sep 24, 2020

கே.டி.ராகவன் 660 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறினாரா ?

பரவிய செய்தி

தமிழகத்தில் தனித்துப்போட்டியிட்டால் 660 இடங்களில் ஜெயிப்போம்! பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பேட்டி

kt raghavan 660

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழக பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி ராகவன் அளித்த பேட்டி வெளியான செய்தித்தாளில், பாஜக தனித்துப்போட்டியிட்டால் 660 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறியதாக இடம்பெற்று இருக்கிறது. அந்த செய்தித்தாள் பக்கம் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து பகிரப்பட்டு வருகிறது.

kt raghavan 660

Facebook link | archive link 

சமீபத்தில், தமிழக பாஜகத் தலைவர் எல்.முருகன் கூட தனித்து நின்றால் பாஜக 60 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறி இருந்தார். கே.டி ராகவன் கூறியதாக இப்படி வைரல் செய்யப்படும் செய்தித்தாள் புகைப்படத்தில் எடிட் செய்து இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. 60 என்பதற்கு பக்கத்தில் 6-ஐ கூடுதலாக இணைத்து உள்ளார்கள் என நன்றாக கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.

kt raghavan 660

” விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.டி.ராகவன், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகத் தனித்துப் போட்டியிட்டாலும் 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது ” என 2020 செப்டம்பர் 5-ம் தேதி தினமணி செய்தியில் வெளியாகி இருக்கிறது. எனினும், தற்போது வைரலாகும் செய்தித்தாள் எந்த நிறுவனத்தின் வெளியீடு எனத் தெரியவில்லை.

kt raghavan 660

கே.டி.ராகவனும் தன்னுடைய முகநூல் பக்கத்தில், வைரல் செய்யப்படும் செய்தித்தாளின் புகைப்படத்தைப் பகிர்ந்து இது போலியான செய்தி எனப் பதிவிட்டு இருக்கிறார்.

Facebook link | archive link 

முடிவு : 

நம் தேடலில், தமிழகத்தில் தனித்துப்போட்டியிட்டால் 660 இடங்களில் ஜெயிப்போம் என பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக பரவும் செய்தித்தாள் எடிட் செய்யப்பட்ட போலியான செய்தி என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader