ஃபேஷன் டிசைனர் கிர்சாய்தா இறப்பை வைத்து பரப்பப்படும் செண்டிமெண்ட் வதந்தி !

பரவிய செய்தி

உலகப்புகழ்பெற்ற டிசைனர் Kyrzayda Rodriguez. சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

கிர்சாய்தா ரோட்ரிகஸ் எனும் பிரபல ஃபேஷன் டிசைனர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்பதற்கு முன்பாக தன்னிடம் எத்தனையோ செல்வம் இருந்தும், மருத்துவமனையில் எப்படிப்பட்ட நிலையில் மரணத்தை எதிர்நோக்கி உள்ளேன் என அவரின் மரணத்திற்கு முன்பாக எழுதிய வார்த்தைகள் எனக்கூறி நீண்ட தகவலை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண்ணின் புகைப்படத்துடன் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

Advertisement

உணர்வு ரீதியான தகவல் என்பதால், அதனை ஏற்றுக்கூடியதாக இருப்பதாலும் ஆயிரக்கணக்கில் பகிர்ந்து வருகிறார்கள். எனினும், பதிவின் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கிர்சாய்தா ரோட்ரிகஸ் பெயரை கொண்டு தேடிப் பார்க்கையில், கிர்சாய்தா ரோட்ரிகஸ் உடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை கண்டறிந்து அதில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களை பார்க்கையில், வைரலாகும் புகைப்படத்துடன் ஒத்துப்போகவில்லை, வெவ்வேறு நபராக உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழில் வெளியிட்ட பதிவை போன்று ஆங்கிலத்திலும் கிர்சாய்தாவின் கடைசி வார்த்தைகள் என வெளியான இணைய பக்க தகவலை காண நேரிட்டது. www.standardmedia.co எனும் இணையதளத்தில், 40 வயதான கிர்சாய்தா ரோட்ரிகஸ் மாடலிங் மற்றும் ஃபேஷன் டிசைன் தொழிலை மேற்கொண்டு வரும் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஆவார். வயிற்றில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 10 மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த கிர்சாய்தா 2018 செப்டம்பர் மாதம் உயிரிழந்து உள்ளார்.

Advertisement

Instagram archive link 

கிர்சாய்தா தனது பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக எழுதிய வார்த்தைகள் என தமிழில் பரவுவது போன்ற தகவலை வெளியிட்டு உள்ளனர். ஆனால், ஆதாரங்களை வழங்கவில்லை, கிர்சாய்தா உடைய புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு உள்ளனர். கிர்சாய்தா உடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் இறுதிப் பதிவுகளை ஆராய்ந்து பார்க்கையில் சமூக வலைதளத்தில் பரவுவது போன்று எந்தவொரு தகவலையும் பகிரவில்லை.

இதையடுத்து, வைரல் பதிவுடன் இணைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் யார் எனத் தேடிப் பார்க்கையில், 2017-ல் ambrygen எனும் வலைப்பக்கத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெண் தன்னுடைய சிகிச்சை பயணத்தை பகிர்ந்து கொண்ட பதிவில் அப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

மேலும் படிக்க : ஹோட்டலில் இடம் தராததால் தன் சிலைக்கு முன்பாக அர்னால்ட் உறங்கியதாக பரவும் வதந்தி !

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என உணர்வுரீதியாகக் கூறும் கதைகள் மக்களிடம் அதிவேகமாக சென்றடைந்தாலும் அதில் பொய்யான கதைகளும் பிரபலமடைகின்றன. இதற்கு முன்பாக, ஹாலிவுட் நடிகர் அர்னால்டை வைத்தும் உணர்வுரீதியில் பொய்யான கதையை உருவாக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், கிர்சாய்தா ரோட்ரிகஸ் எனும் ஃபேஷன் டிசைனர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது உண்மையாக இருந்தாலும் அவர் இறப்பதற்கு முன்பாக எழுதிய வார்த்தைகள் என்று பரப்பப்படுபவை பொய்யான தகவல் மற்றும் புகைப்படமும் வேறொரு பெண்ணுடையது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button