தொழிலாளர்களுக்கு ரூ.1,25,000 நிதி பெற உரிமை உள்ளதாக பரவும் போலி இணையதளம் !

பரவிய செய்தி
தொழிலாளர்களுக்கு ஒரு முக்கியான தகவல் !!. 1990 மற்றும் 2000-க்கு இடைப்பட்ட ஆண்டில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் இருந்து ருபாய் 1,25,000 அளவிலான நிதி நன்மையை பெற உரிமை உண்டு. இந்த சலுகையை எடுத்துக் கொள்ள உரிமை உள்ளவர்களின் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று சோதிக்கவும்.
மதிப்பீடு
விளக்கம்
சமூக வலைதளங்களில், தொழிலாளர்களுக்கு ரூ.1,25,000 அளவிலான நிதி நன்மையை பெற உரிமை உள்ளதாக கூறி பரவும் www.labours.gov.za எனும் இணையதளம் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. za என்பது தென் ஆப்ரிக்கா நாட்டின் டொமைன். மேலும், அந்த இணையதளத்தின் லிங்கை க்ளிக் செய்தால் error என்றே வருகிறது.பரவும் செய்தியில் கூறுவது போன்ற எந்தவொரு நிதி நன்மையும் வழங்கப்படவில்லை.
” இந்திய அரசால் அப்படி எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மோசடி இனையதளங்களில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் ” என PIB தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.
Claim- A whatsapp message circulating, claims that workers who worked during 1990-2020 are entitled to receive Rs 120000 from Labour Ministry.#PIBFactCheck: Its #FakeNews! There is no such announcement by Govt. of India. Beware of such fraudulent websites. pic.twitter.com/qyS0mDmQW4
— PIB Fact Check (@PIBFactCheck) May 14, 2020
தொழிலார்களுக்கு நிதி நன்மைகள் வழங்குவதாக போலியான இணையதளங்கள் சமூக வலைதளங்களில் பரவுவது முதல் முறையல்ல. கடந்த ஆண்டில், தொழிலார்களுக்கு 80,000 அளவிலான நிதி நன்மைகள் கிடைப்பதாகவும், அதற்கான பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என பார்க்குமாறு EPFO உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலியான இணையதளம் பரவியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : தொழிலாளர் நிதி நன்மையென EPFO பெயரில் போலியான இணையதளம்
தொழிலாளர்களுக்கு நிதி நன்மையை அளிப்பதாக பகிரப்படும் இணையதளங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்காமல் பகிர வேண்டாம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.