800 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய பகவத் கீதை | எங்குள்ளது ?

பரவிய செய்தி

உலகில் மிகப்பெரியதும் கனமானதுமான புத்தகம் ஸ்ரீமத் பகவத்கீதை. இதன் எடை 800 கிலோ, 670 பக்கங்கள். இருக்கும் இடம் இத்தாலி-மிலன். ஒருபக்கத்தை திருப்ப வேண்டுமானால் நான்கு பேராவது வேண்டும்.

மதிப்பீடு

விளக்கம்

சுமார் 800 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய பகவத்கீதை புத்தகம் இத்தாலியின் இலன் எனும் பகுதியில் வைக்கப்பட்டு உள்ளதாக முகநூலில் கணக்கில் ஒரு வீடியோ பகிரப்பட்டு இருந்தது. அந்த பதிவை யூடர்ன் ஃபாலோயர் ஒருவர் அனுப்பி இருந்தார். அந்த வீடியோவில் பார்ப்பதற்கு மிகப்பெரிதாய் இருக்கும் புத்தகத்தில் கிருஷ்ணரின் புகைப்படமும் இடம்பெற்று இருந்ததை காண முடிந்தது.

Advertisement

உலகின் மிகப்பெரிய பகவத் கீதை புத்தகம் குறித்து தெரிந்து கொள்ள ஆராய்ந்த பொழுது Iskcon news என்ற இணையதளத்தில் 2018 டிசம்பர் 1-ம் தேதி ” 800 Kg Bhagavad-gita Set to be Largest Sacred Text in the World ” என்ற தலைப்பில் முகநூலில் பதிவிடப்பட்ட மிகப்பெரிய பகவத் கீதை புத்தகம் குறித்து தகவல் அளிக்கப்பட்டு இருந்தது.

இத்தாலியில் உள்ள இஸ்கான் அமைப்பின் மூலம் நிதி அளிக்கப்பட்டு, Mediterranean branch of the BBT மூலம் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய பகவத் கீதை புத்தகமானது 2.80 x 2.0 மீ அளவையும், சுமார் 800 கிலோ எடையுடன், 670 பக்கங்களைக் கொண்டது.

இந்த புத்தகத்தின் பக்கங்கள் அனைத்தும் இத்தாலியில் உள்ள மிலன் பகுதியில் YUPO எனும் சிந்தெடிக் பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்டவை. ஆதலால், பக்கங்கள் வாட்டர்ஃப்ரூப் தன்மையை கொண்டிருப்பதாகவும், புத்தகத்தில் 18 அழகிய ஓவியங்கள் இடம்பெற்று இருப்பதாகவும் இஸ்க்கான் அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஒரு பக்கத்தை திருப்ப நான்கு பேரெல்லாம் தேவையில்லை, ஒருவரே புத்தகத்தின் பக்கங்களை திருப்பி பார்க்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டு உள்ளது.

புத்தகம் எங்குள்ளது ?

Advertisement

மிகப்பெரிய பகவத் கீதை புத்தகம் இத்தாலியில் உள்ள மிலன் பகுதியில் வைக்கப்படவில்லை. இந்தியாவில் டெல்லியில் உள்ள இஸ்க்கான் கோவிலில் வைத்துள்ளனர். 2019 பிப்ரவரி 26-ம் தேதி உலகின் மிகப்பெரிய பகவத்கீதை புத்தகத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இஸ்க்கான் அமைப்பால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய புனித நூலக கருதப்படும் பகவத் கீதை புத்தகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி அவர்களின் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, உரையாற்றிய வீடியோ யூட்யூப்-ல் வெளியாகி இருக்கிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button