வழக்கறிஞர்களுக்கு டோல் கட்டணத்தில் விலக்கு அளிப்பதாக பரவும் கடிதம் உண்மையா ?

பரவிய செய்தி

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில வழக்கறிஞர்களுக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக வைரலாகும் கடிதம்.

மதிப்பீடு

விளக்கம்

ஐஏஎஸ் அதிகாரியும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் தனிச் செயலாளரான Sanket bhondve வழக்கறிஞர் ரவி கௌடா என்பவருக்கு டிசம்பர் 3-ம் தேதி அனுப்பியதாக காணப்படும் கடிதத்தில், 2019 டிசம்பர் 1-ம் தேதியிட்ட உங்களின் கடிதத்தில் இருந்து, இந்தியாவின் அனைத்து மாநில வழக்கறிஞர்களுக்கும் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதை நான் தெரிவிக்கின்றேன். வழக்கறிஞர்கள் தங்களின் அடையாள அட்டைகளை காணப்பிக்க வேண்டும் ” எனக் குறிப்பிட்டு இருந்தது.

வழக்கறிஞர்களுக்கு சுங்கச்சாவடியில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக கூறுவதையும், பரவி வரும் கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு யூடர்ன் ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

Advertisement

உண்மை என்ன ? 

வழக்கறிஞர்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து தேடிய பொழுது, இந்திய அளவில்  முதன்மை செய்திகளில் அவ்வாறான தகவல்கள் ஏதுமில்லை. மாறாக, தற்பொழுது கோரிக்கைகளே எழுந்துள்ளன. மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து உள்ளதாக டிசம்பர் 11-ம் தேதி செய்திகளில் வெளியாகி உள்ளது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சமூக வலைதள ட்விட்டர் பக்கத்தில், ” தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின்படியே பயனர்களிடம் கட்டணத்தை வசூலிக்கிறது என்பதை தெளிவுப்படுத்துகிறோம். அந்த விதிகளின்படி, நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பயனர்களின் கட்டண வசூலில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை ” என்பதை டிசம்பர் 11-ம் தேதி பதிவிட்டு உள்ளது.

Twitter link | archived link

Twitter link | archived link 

வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக வெளியான செய்தியுடன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் தனிச் செயலாளரான Sanket bhondve எழுதியதாக பரவும் கடிதமும் தவறானவை.

Twitter link | archived link 

Press Information Bureau வெளியிட்ட ட்விட்டர் பதிவில், வழக்கறிஞர் ரவி கௌடா முகவரி குறிப்பிடப்பட்ட கடிதம் போலியானவை ” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close