எலுமிச்சை புற்றுநோயைக் குணப்படுத்துமா ?

பரவிய செய்தி
எலுமிச்சை வெறும் ஜூஸ் மட்டும் இல்லை, வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவதால் புற்றுநோய் செல்களை அழிக்கும். 1000 கீமோதெரபிகளை விட வலிமையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மதிப்பீடு
சுருக்கம்
சிட்ரஸ் பழ வகையில் ஒன்றான எலுமிச்சை புற்றுநோய் செல்களை அழிக்கும் என ஆய்வு அறிக்கைகள் பல வெளியாகினாலும், எலுமிச்சை கொண்டு புற்றுநோயைக் குணப்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டவில்லை.
விளக்கம்
நாம் அறிந்த வரையில் எலுமிச்சைப் பழம் ஜூஸ், உணவிற்கு அல்லது உடல் எடைக் குறைக்கும் முறைக்கு பயன்படுத்துவது உண்டு. ஆனால், எலுமிச்சை கொண்டு புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என கூறுவதை இணையத்தில் பார்க்க முடிகிறது.
இயற்கையான பழம், உடலுக்கு நன்மை பயக்கும் என அறிவியல் ரீதியாக அறிவிக்கப்பட்டது என அறிந்து இருப்போம். ஆனால், புற்றுநோய் தடுப்பாக இருக்குமா என்பது ஆச்சரியம்.
சிட்ரஸ் :
சிட்ரஸ் குடும்பத்தில் எலுமிச்சை, ஆரஞ்சு, நார்த்தங்காய் உள்ளிட்ட பல பழங்கள் இடம்பெறுகிறது. எலுமிச்சை மட்டுமின்றி சிட்ரஸ் பழ வகைகள் புற்றுநோயைத் தடுக்கும், செல்களை அழிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த செய்தியின் தொடங்கும் இன்று அல்ல, 2011 ஆம் ஆண்டில் இருந்தே உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
புற்றுநோய் தடுப்பு சாத்தியமா ?
2000-ம் ஆண்டில் இருந்தே சிட்ரஸ் மூலம் புற்றுநோய் செல்களை தடுக்க முடியுமா என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் சமர்பித்து வருகின்றனர்.
சிட்ரஸ் எலுமிச்சையின் தோல் மற்றும் விதைகளில் இயற்கையாகவே limonoids இருக்கிறது. இவை புற்றுநோயை தடுக்கும் என பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
முடிவு :
ஆய்வுகள், ஆராய்ச்சி கட்டுரைகள், செய்தி தளங்களில் புற்றுநோய் தடுப்பு மருந்தாக சிட்ரஸ் எலுமிச்சை இருக்கும் என நம்பப்படுகிறது.
ஆனால், எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களால் புற்றுநோய் செல்களை தடுக்க முடியும் என நிரூபிக்கப்பட்டவில்லை என்பதே உண்மை.
எலுமிச்சையால் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என இன்று வரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவியல் அல்லது மருத்துவ அறிக்கைகள் வெளியாகவில்லை.
மேலும், புற்றுநோய் தடுப்பு மற்றும் சிட்ரஸ் கீமோதெரபி சிகிச்சையை விட 10,000 மடங்கு வலிமையானது எனக் கூறப்படுவதை உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மறுக்கின்றனர்.
உடலுக்கு நன்மை அளிக்கும் எலுமிச்சையால் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என அதிகாரப்பூர்வமாக மற்றும் மருத்துவ ரீதியாக நிரூபணம் ஆகவில்லை .