அமெரிக்க தேவாலயத்தில் ஆணும் ஆணும் திருமணம் செய்த போது மின்னல் தாக்கியதாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில்
ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடக்கும் போது மின்னல் தாக்கி ஆலயம் தீக்கிறையானது. pic.twitter.com/zeZZTDG3LN— மகராஜா (@Magaraja2021) July 5, 2023

அதில், “ஸ்பென்சரில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான தேவாலயத்தின் கோபுரம் வெள்ளிக்கிழமை அன்று இடிந்து விழும் தருணத்தை இந்த வீடியோ படம்பிடித்துள்ளது. படஉதவி: ஜானதன் கெல்லி (Jonathan Kelley)” என்று குறிப்பிட்டுள்ளது.
New video captures the moment the steeple of a centuries-old church in Spencer came tumbling down Friday.
📸: Jonathan Kelley
More details: https://t.co/w3DOBOBEbC pic.twitter.com/l6nuSQx6pA
— Boston 25 News (@boston25) June 2, 2023
இதுகுறித்து நியூயார்க் போஸ்ட் ஊடகம், கடந்த ஜூன் 03 அன்று “வரலாற்றுச் சிறப்புமிக்க மாசசூசெட்ஸ் தேவாலயம் தீயில் எரிந்து நாசமானது” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாசசூசெட்ஸ் தேவாலயம் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்து ஏற்பட்ட போது தேவாலயம் காலியாக இருந்ததால் தீ விபத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளது.
