This article is from Sep 30, 2018

சிங்கத்தின் குட்டியை யானை சுமந்து சென்றதாக பரவும் படங்கள்..!

பரவிய செய்தி

தன் குட்டியை 2 கி.மீக்கு மேலாக சுமந்து சென்ற பெண் சிங்கம் ஒரு கட்டத்தில் களைப்புற- எங்கிருந்தோ வந்த யானை ஒன்று, தனது தும்பிக்கையால் சிங்கத்தின் குட்டியை தூக்கிச் சென்ற காட்டில் நடந்த காட்சி. மனிதர்களிடம் குறைந்து வரும் மனித நேயம்..!! நம்பமுடியாத விலங்கு நேயம்..!

மதிப்பீடு

சுருக்கம்

Kruger தேசிய பூங்காவின் ட்விட்டர் பக்கம் ஏப்ரல் 1-ம் தேதி பெண் சிங்கத்தின் குட்டியை யானை சுமந்து செல்வதாக எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

விளக்கம்

உயிரினங்களுக்கு இடையே இயற்கையாகவே உள்ள நேயம் சில தருணங்களில் ஆச்சரியமூட்டும் விதமாக இருக்கும். வெவ்வேறு இனத்தின் உயிரினங்கள் ஒற்றுமையாக அன்பு செலுத்துவதை பார்க்கும் பொழுது மனிதரிடத்தில் கூட அவை தென்படுவதில்லை என்று பேசுவதுண்டு.

காட்டில் வெகு தொலைவிற்கு தன் குட்டியினை தூக்கிச் சென்ற பெண் சிங்கம் ஒன்று களைப்புற்ற நிலையில் இருக்கும் பொழுது அதற்கு உதவ அங்கு வந்த யானை சிங்கத்தின் குட்டியை தும்பிக்கையில் தூக்கிச் செல்லும் அரிய நிகழ்வு என்று ஓர் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி 20 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான லைக், ஷேர்களை பெற்றுள்ளது.

” யானை மற்றும் சிங்கம் குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை முதன் முதலில் வெளியிட்டது ஆப்ரிக்காவை சேர்ந்த ஒரு தேசிய பூங்கா ஆகும். ஆப்பிரிக்காவில் உள்ள Kruger தேசிய பூங்காவின் ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 1-ம் தேதி இப்புகைப்படம் வெளியிடப்பட்டது.அந்த ட்விட்டில் “Tingled by sloof lira” என குறிப்பிட பட்டிருக்கும் அதாவது April fools -ஐ தலைகீழாக குறிப்பிட்டுள்ளனர். “.

வெளியான படமானது உலகளவில் வைரலாகியது. வைரலாகியது என்பதை விட அனைவரையும் முட்டாளாக்கியது என்று கூறுவதே பொருத்தமானது.

சிங்கத்தின் குட்டியை யானை சுமந்து செல்வது போன்ற எந்தவொரு நிகழ்வும் அங்கு நடைபெறவில்லை. இவை போட்டோஃஷாப் செய்யப்பட்டவை. Kruger தேசிய பூங்கா மக்களை மடையர்களாக்கி உள்ளதாக ஆதாரப்பூர்வமாக சிலர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

யானை மட்டும் தனியாக செல்லும் படத்துடன் சிங்கத்தின் படத்தினை இணைத்து Kruger தேசிய பூங்கா வெளியிட்டுள்ளது. யானை மட்டும் தனியாக இருக்கும் படங்களை ட்விட்டர் பதிவில் வெளியாகியுள்ளது

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader