ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை சிபிஐ வெளியிட்டதா ?

பரவிய செய்தி

ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் பட்டியல் :

Facebook post | archived link 

மதிப்பீடு

விளக்கம்

அமெரிக்க புலனாய்வு அமைப்பு, உலகிலேயே குழந்தைகளின் ஆபாசப் படத்தை பார்ப்பவர்கள் அதிகம் கொண்ட நாடாக இந்தியாவும், அதில் முதன்மையான நகரமாக சென்னையும் இருப்பதாக ஓர் அதிர்ச்சி அளிக்கும் தகவலை இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்தது.

Advertisement

அதன்படி, குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து வீடியோக்களை பதிவேற்றும் இணையதளங்களை பயன்படுத்துபவர்களின் பட்டியலை தமிழக போலீசாரிடம் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் கிண்டல்களும், தவறான செய்திகளும் பரவத் துவங்கி இருந்தன.

Facebook post | archived link 

இப்படி ஆபாசப் படங்களை பார்ப்பவர்களின் பட்டியலை சிபிஐ வெளியிட்டு உள்ளதாக பெயர்கள், கல்லூரி, பணியிடம் மற்றும் ஆபாச இணையதளம் ஆகியவை அடங்கிய ஓர் பட்டியல் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அது போலியான பட்டியலாகும். சிபிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கையில், அவ்வாறான பட்டியல் வெளியிடப்படவில்லை, சிபிஐ அப்பட்டியலை வெளியிட்டதாக செய்திகளும் இல்லை.

இதையெல்லாம் விட, அந்த பட்டியலின் மேலே ” Central Bureau Investigation ” என்பதற்கு பதிலாக ” Central  Bureau Investication ” என எழுத்து பிழையுடன் ஓர் பட்டியலை தயார் செய்து இருக்கிறார்கள்.

Advertisement

Youtube video | archived link 

இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்பு பிரிவின் கூடுதல் டிஜிபி திரு.ரவி கூறுகையில், ” மத்திய உள்துறை அமைச்சகம் எங்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். அது தொடர்பான குறிப்புகள் உள்ளன. அதை வைத்து, குழந்தைகள் சம்பந்தபட்ட ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி குற்றமாகும், இதற்காக 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்பவர்களின் விவரங்களை சேகரித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் ” எனத் தெரிவித்து உள்ளார்.

2019 நவம்பர் 15-ம் தேதி வெளியான இந்தியா டுடே செய்தியில், ” ஆன்லைன் மூலமாக பாலியல் குற்றங்களை தடுத்தல் மற்றும் விசாரணைக்காக சிபிஐ-யில் தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவு, குழந்தைகள் ஆபாசத் தளங்களை உருவாக்குவோர் மற்றும் பகிர்வோரை மட்டுமின்றி, அந்த தளங்களை பார்ப்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்களையும் விசாரிப்பார்கள் ” எனக் கூறி இருந்தனர்.

அக்டோபர் 2019-ல் வெளியான செய்தியில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பி வருபவர்கள் தொடர்பாக டெல்லி, சென்னை, ஜெய்ப்பூர், ஹௌரா காசியாபாத், ஃபரிதாபாத் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அதில், வாட்ஸ் அப் குழுக்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த குழுவின் உறுப்பினர்களை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து செல்போன், மெமரி கார்டு உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

குழந்தைகளின் ஆபாசப் படங்களை வைத்திருப்பதும் குற்றமாகும் என்றும், அப்படி வீடியோக்களை வைத்து இருக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி ரவி கூறியதை தகவல் , சில ஊடகங்களில் கூட ஆபாசப் படங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேம்போக்காக கூறப்படுவதை பார்க்க முடிந்தது. இது தவறான செய்திகள் மக்களுக்கு கொண்டு செல்ல வழிவகை செய்யும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button