ஊரடங்கில் நடந்தே செல்லும் தொழிலாளர்கள் என தவறாக பரவும் புகைப்படம் !

பரவிய செய்தி

கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் தொழிலாளர்களின் நிலை என பரவும் புகைப்படம்.

மதிப்பீடு

விளக்கம்

கொரோனா வைரஸ் ஊரடங்கால் புலம்பெயர்ந்து பிற மாநிலங்களில் வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் வேலை, உண்ண உணவு இல்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்ல சரியான போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தினால் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்தே செல்லும் அவல நிலைக்கு உள்ளார்கள்.

Advertisement

அப்படி நடந்து செல்லும் தொழிலாளர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில், ஒருவர் வயதான மூதாட்டியை தூக்கிக் கொண்டு செல்லும் மேற்காணும் புகைப்படமும் இந்திய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எஸ்சி துறை உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர்.

Twitter link | archive link

அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2017-ல் இன்டர்நேஷனல் நியூஸ் ஏஜென்சி pressenza இணையதளத்தில் பங்களாதேஷின் கோஸ் பஜாரில் செல்லும் ரோஹிங்கியா அகதிகள் என வெளியிட்ட புகைப்படத் தொகுப்பில் இப்புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.

Advertisement

2017-ல் UkhiyaNews.Cm எனும் முகநூல் பக்கத்தில் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் நபர் தன்னுடைய தாயை சுமந்து கொண்டு செல்வதாக அளித்த பேட்டி வீடியோவாக வெளியாகி இருக்கிறது. 

Facebook link | archive link 

2017-ல் பங்களாதேஷ் நாட்டில் எடுக்கப்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளின் புகைப்படத்தை இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் என இந்திய அளவில் தவறாக பரப்பி வருகிறார்கள்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம் / Proof Links

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button