லண்டனில் உள்ள மெட்ரோ நிலையத்தில் தமிழ் மொழியா ?

பரவிய செய்தி

லண்டனில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் தமிழ் மொழி. இந்தியாவிலோ- உலகின் பழமையான தமிழ் மொழிக்கு உண்டான உரிமையை கேட்டு போராடிக்கொண்டிருக்கிறோம்.

மதிப்பீடு

விளக்கம்

லண்டன் நகரில் இயங்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் பெறும் இயந்திரத்தில் தமிழ் மொழி இடம்பெற்று இருப்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தை காண முடிந்தது. அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்த பொழுது, லண்டன் மெட்ரோ நிலையத்தில் எந்தெந்த மொழியெல்லாம் இடம்பெற்று இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

Advertisement

Oyster Card :

லண்டன் நகரை சுற்றிப்பார்க்க வரும் மக்கள் அங்கு இயங்கக்கூடிய அனைத்து அரசு போக்குவரத்து வாகனங்களிலும் எளிதாக பயணிக்க ஏதுவாக ஒரே ஒரு எலெக்ட்ரானிக் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டில் உள்ளது.

குறிப்பிட்ட தொகையை செலுத்தி ” Oyster Card ” பெற்றுக் கொண்டால் நகரில் இயங்கும் பேருந்துகள், ரயில், டிஎல்எஸ், ஆறு பேருந்து சேவை, மெட்ரோ உள்ளிட்ட அரசு போக்குவரத்து சேவையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

டிக்கெட் இயந்திரத்தில் தமிழ் :

2017 ஜனவரி 24-ம் தேதி Cultural London என்ற யூட்யூப் தளத்தில் ” How to buy an Oyster Card in London ” என்ற தலைப்பில் வெளியான வீடியோவில் oyster card-ஐ பல்வேறு மொழியில் எப்படி வாங்கலாம் என விவரித்து இருப்பர். அதில், பல நாடுகளில் உள்ள மொழிகள் இணைக்கப்பட்டு உள்ளன. அதில், தமிழ் மொழியும் இருப்பதை காண முடிந்தது.

Advertisement

மேலும் படிக்கஜப்பான் நாட்டில் தமிழில் அறிவிப்பு பலகை.!

எப்பொழுது இருந்து தொடக்கம் :

2009-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி Transport For London இணையதளத்தில் ” London Underground unveils more languages at ticket machines ” என்ற தலைப்பில் வெளியான தகவலில், தலைநகரில் வாழும் அல்லது பயணம் மேற்கொள்ள வந்த மக்களுக்கு உதவக்கூடிய வகையில் டிக்கெட் இயந்திரத்தில் கூடுதல் மொழிகள் இணைக்கப்பட்டு இருப்பதாக அறிவித்து இருந்தனர்.

சில டிக்கெட் இயந்திரத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பனீஸ் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட 6 மொழிகள் இருந்தன. தற்பொழுது Transport for London’s (TfL’s) முதலீடு திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து நிலையத்திலும் உள்ள தொடு திரை இயந்திரத்தில் கூடுதல் மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.

” கூடுதலாக, அரபிக், பெங்காலி, சைனீஸ், கிரீக், குஜராத்தி, ஹிந்தி, போலிஷ், பஞ்சாபி, தமிழ், துர்கிஷ் மற்றும் உருது ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டு உள்ளன “. இந்தியாவில் இருந்து மொத்தம் 4 மொழிகள் இடம்பெற்று உள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு திசையிலும் உள்ள முக்கிய மொழிகள் இடம்பெற்று இருக்கிறது.

இந்தியாவில் ” ஒன் கார்டு ” :

லண்டனில் அனைத்து அரசு போக்குவரத்திற்கும் ஒரே ஒரு ஸ்மார்ட்கார்டு பயன்படுத்துவது போன்ற திட்டத்தை இந்தியாவிலும் நடைமுறைக்கு விரைவில் கொண்டு வரப்படும் என நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் கடந்த 2018-ல் தெரிவித்து இருந்தார்.

முடிவு :

நம்முடைய தேடலில் இருந்து, லண்டனில் இயங்கும் மெட்ரோ நிலையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் டிக்கெட் இயந்திரத்தில் தமிழ் மொழி இடம்பெற்று இருப்பது உண்மையே என அறிய முடிந்தது. Oyster Card பெற பயன்படுத்தப்படும் டிக்கெட் இயந்திரங்களில் தமிழ் மொழியை காணலாம். 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியை இடம்பெற செய்திருக்கிறார்கள்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button