லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள திப்பு சுல்தானின் படமென வதந்தி.. யார் இவர் ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
மைசூர் அரசர் திப்பு சுல்தானின் உண்மையான உருவப்படம் என சில தவறான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருவதை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். தற்போது லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள திப்பு சுல்தானின் உருவப்படம் என இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. நமது வாசகர்கள் தரப்பிலும் இதுகுறித்து கேட்கப்பட்டது.
இது பற்றி தேடுகையில், 2015-ல் இந்த புகைப்படத்துடன் மற்றொரு புகைப்படமும் இணைத்து ஆங்கிலத்தில் பகிரப்பட்ட முகநூல் பதிவு கிடைத்தது. இரண்டாவதாக உள்ள புகைப்படத்தில் இருப்பவர் திப்பு சுல்தான் இல்லை என சில ஆண்டுகளுக்கு முன்பே நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : இது திப்பு சுல்தானின் புகைப்படமா ?
தற்போது பகிரப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில்,” டான்சானியா நாட்டின் சான்சிபார் தீவின் சுல்தான் சையத் அஹமத் பின் துவைன் என Getty images இணையதளத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இவர் 1893 முதல் 96 வரை அதிகாரத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
pantheon.world இணையதளத்தில் சுல்தான் சையத் அஹமத் பின் துவைன் பற்றிய குறிப்புகள் புகைப்படத்துடன் இடம்பெற்று உள்ளன.
முடிவு :
நம் தேடலில், லண்டனில் உள்ள திப்பு சுல்தானின் உருவப்படம் என பகிரப்படும் புகைப்படம் ஆனது டான்சானியா நாட்டில் உள்ள சான்சிபார் தீவின் 5 வது சுல்தான் சையத் அஹமத் பின் துவைன் உடைய புகைப்படம் என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.