உண்மையில் லார்டு லபக் தாஸ் என்பவர் இருந்தாரா ?|பெயருக்கு பின்னால் உள்ள கதை என்ன ?

பரவிய செய்தி

லார்டு லபக்தாஸ் எனும் வார்த்தையை தமிழ் மக்களிடம் பொதுவாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. ” நீ என்ன பெரியார் லார்டு லபக்தாஸா ” மக்கள் கூறுவதை நீங்கள் கேட்கலாம். அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் மற்றும் அதைப் பயன்படுத்துவற்கான காரணம் ?

Facebook link | archived link

மதிப்பீடு

விளக்கம்

நம் மக்களிடையே பிரபலமான கிண்டல் வார்த்தையாக இருப்பது ” லார்டு லபக் தாஸ் ” . ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் தன்னுடைய கல்லூரி பேராசிரியருக்கு போன் செய்து ” நீங்க வெறும் தாஸா இல்லை லார்டு லபக்தாஸா ” எனக் கேட்டு கிண்டல் செய்யும் காட்சி தமிழகம் முழுவதும் பிரபலமானது.

இப்படி கிண்டலுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் ” லார்டு லபக் தாஸ் ” எனும் வார்த்தைக்கு பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தத்தை யாரும் அறிந்திருக்கவில்லை, ஆகையால் ” லார்டு லபக் தாஸ் என்றால் யார் எனக் கூறி ஓர் தகவல் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல ஆண்டுகளாகவே பரவி வருகிறது.

Advertisement

” லார்டு லபக்தாஸ் என்பவர் பிரபல சமூக சீர்திருத்தவாதி மற்றும் ஆன்மீகவாதியாவார். மிகச் சிறந்த அறிவாற்றல் கொண்டவரான இவர் பல துறைகளில் வல்லுநராக இருந்துள்ளார். ஒரு புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கும் ஆற்றல் கொண்டவர். மெட்ராஸில் லார்டு லபக்தாஸ் என மிகப் பிரபலம். ஆகவே, யாராவது தங்களின் துறையில் வல்லுநராக இருந்தால் அவர் லார்டு லபக் தாஸ் என அழைக்கப்படுகிறார் ” எனக் கூறப்பட்டுள்ளது.

உண்மை என்ன ? 

உண்மையில், லார்டு லபக்தாஸ் என்பவர் இருந்தாரா என்பது தொடர்பாக ஆதாரங்கள் குறித்து தேடிய பொழுது வரலாறு சார்ந்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. சமூக சீர்திருத்தவாதி, சிறந்த அறிவாற்றல் கொண்ட ஒருவரைப் பற்றி வரலாறு சார்ந்த ஆதாரங்கள் மற்றும் நம்பகத்தகுந்த குறிப்புகள் என எதுவும் கிடைக்கவில்லை. மாறாக, லார்டு லபக்தாஸ் என்றால் யார் என பரவி வரும் செய்தியே நமக்கு கிடைத்தது.

வைரலாகும் செய்தியில் இருக்கும் நபரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் அவர் லார்டு லபக் தாஸ் இல்லை, லார்டு கர்சன் என செய்ய அறிய முடிந்தது. 1898 முதல் 1905-ம் ஆண்டு வரை லார்டு ஜார்ஜ் கர்சன் இந்தியாவின் வைசிராய் ஆக பதவி வகித்தவர்.

Advertisement

இந்தியாவில் லார்டு கர்சன் மற்றும் அவரின் மனைவி மேரி இறந்த புலியுடன் இருக்கும் உண்மையான புகைப்படம் தி கிரவுன் க்ரோனிக்கல் இணையதளத்தில் பதிவாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருந்து கர்சனை மட்டும் கட் செய்து லார்டு லபக்தாஸ் கதையுடன் பரப்பி உள்ளனர்.

2016-ம் ஆண்டில் தி ஹிந்து ஆங்கில செய்தி இணையதளத்தில் ” The story behind Lord Labak Das ” என்ற தலைப்பில் லார்டு லபக்தாஸ் பெயருக்கு பின்னால் உள்ள கதையை வெளியிட்டு இருந்தனர்.

” தொடர்ச்சியான வாட்ஸ் அப் ஃபார்வர்டு செய்திகளில், உண்மையில் லார்டு லபக் தாஸ் சுதந்திர இந்தியாவின் முந்தைய காலத்தில் மெட்ராஸ் மாகாணத்தின் கனிவான உள்ளம் கொண்ட ஆளுநர் எனக் கூறுகின்றனர். செய்தியில் காண்பிக்கப்பட்டு இருக்கும் நபரின் உருவத்தை ஆராய்ந்து பார்த்த பொழுது அவர் லார்டு கர்சன் என தெரிகிறது. எனவே, லார்டு லபக் தாஸ் என்பது யாரோ ஒருவரின் கற்பனை. மேலும், இந்த வார்த்தை பிரபலமாக காரணமாக இருந்தது குஜராத்தைச் சேர்ந்த லாட் குடும்பத்தினர் ” எனக் கூறப்பட்டுள்ளது.

19-ம் நூற்றாண்டில் மெட்ராஸ் மாகாணத்தில் பிரபலமாக இருந்த லாட் குடும்பத்தினர் சென்னை ஜெனரல் பீட்டர்ஸ் சாலையின் (ஜி.பி.ஆர்) எல்லைக்குட்பட்ட பகுதியில் பரந்தளவு இடத்தை வைத்திருந்தனர். 20 நூற்றாண்டின் முந்தைய காலத்தில் லாட் குடும்பத்தினருக்கு ஒரு சுவாரஸ்யமான கதை இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, ஜார்ஜ் டவுனில் அனைவருக்கும் இலவசமாக லட்டுகளை வழங்கியதால் அப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக லார்டு லபக்தாஸ் என நகைச்சுவையாக கூறப்பட்டு வந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கும் உண்மைத்தகவல் என பரப்பப்பட்டு வந்த கதையானது யாரோ ஒருவரின் கற்பனை கதை என அறிய முடிகிறது. இந்தியாவின் வைசிராயாக இருந்த லார்டு கர்சன் உடைய புகைப்படத்தை கட் செய்து லார்டு லபக்தாஸ் என தவறாகப் பரப்பி வருகின்றனர்.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close