குழந்தைகளை விடுதலை புலிகள் கொடுமைப்படுத்திய காட்சி எனப் பரப்பப்படும் சிங்கள திரைப்பட காட்சிகள்

பரவிய செய்தி

பயிற்சியின் போது அப்பாவி குழந்தைகளை விடுதலைப் புலிகள் கொடுமைப்படுத்தும் காட்சி.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் பயிற்சியின் போது குழந்தைகளை கொடுமைப்படுத்தும் காட்சிகள் எனக் கூறி சில புகைப்படங்கள் ட்விட்டர் உள்ளிடவையில் பரப்பப்பட்டு வருகிறது. fazila Hijabee எனும் சிங்கள கொடியுடன் இருக்கும் ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

இப்பதிவில், இரு பெண்கள் கையில் துப்பாகியுடன் இருப்பது, விடுதலை புலிகள் உடையில் இருக்கும் நபர் சிறுவன் சட்டையைப் பிடித்து தாக்குவது போன்றும், சிறுவன் விடுதலை புலிகள் உடையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

உண்மை என்ன ? 

விடுதலை புலிகள் தங்கள் பயிற்சியில் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக பரப்பப்படும் புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இக்காட்சிகள் இலங்கையில் வெளியான “பிரபாகரன்” எனும் சிங்கள திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் எனத் தெரிய வந்தது.

2008ம் ஆண்டு இலங்கையின் திரைப்பட இயக்குனர் துசாரா பெய்ரிஸ் இயக்கிய ” பிரபாகரன் ” எனும் திரைப்படத்திற்கு அப்போதே எதிர்ப்புகள் எழுந்தன. இதில், நடித்த நடிகர், நடிகை, இயக்குனர் ஆகியோர் சிங்களர்களே.

 

இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சுப வீரபாண்டியன் தலைமையில் உள்ளே நுழைந்த குழு இப்படம் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி படத்தின் பிரிண்ட்களை எடுத்துச் சென்றதாகவும், இயக்குநரை தாக்கியதாகவும் பிபிசி சிங்களா செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், இலங்கையில் பயிற்சியின் போது அப்பாவி குழந்தைகளை விடுதலைப் புலிகள் கொடுமைப்படுத்தும் காட்சி எனப் பரப்பப்படும் புகைப்படங்கள் தவறானது. இது 2008ல் ” பிரபாகரன் பெயரில் வெளியான சிங்கள திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள். திரைப்படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் தவறாக பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader