என் கணவரின் மனநிலை சரியில்லை என மதனின் மனைவி குற்றம்சாட்டியதாக போலிச் செய்தி !

பரவிய செய்தி
என் கணவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். வெண்பா என்ற பெண் என் கணவரை தவறாக வழி நடத்துகிறார். மதனின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு !
மதிப்பீடு
விளக்கம்
மதன் டைரி யூடியூப் சேனலை நடத்தி வரும் மதன் ரவிச்சந்திரன் சமீபத்தில் தமிழக பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவனின் வீடியோ ஒன்றை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடன் நடத்திய உரையாடலின் ஆடியோ பதிவை வெளியிட்டது என சர்ச்சையான செய்திகளுக்கு மதன் காரணமாகினார்.
இந்நிலையில், மதன் ரவிச்சந்திரனின் மனைவி தன் கணவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்ததாக புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
பரப்பப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என கமெண்ட்களில் சிலர் தெரிவித்து வருகிறார்கள். எனினும், இந்த நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகிறார்கள் என்பதை பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
புதிய தலைமுறை ஊடகத்தின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், மதன் ரவிச்சந்தின் குறித்து இப்படியொரு செய்தி ஏதும் வெளியாகவில்லை. ஆகஸ்ட் 26-ம் தேதி நியூஸ் கார்டுகளை பார்க்கையில், அன்றைய தேதியில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றில் இப்படி எடிட் செய்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 26-ம் தேதி ” தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ” என வெளியிடப்பட்ட நியூஸ் கார்டில் இப்படியொரு செய்தியை எடிட் செய்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : கே.டி.ராகவன் விவகாரத்தில் தினமலர் வைத்த தலைப்பு என எடிட் செய்து பரப்பும் நையாண்டிப் பதிவு !
முடிவு :
நம் தேடலில், என் கணவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். வெண்பா என்ற பெண் என் கணவரை தவறாக வழி நடத்துகிறார். மதனின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு என பரப்பப்பட்டு புதிய தலைமுறை சேனலின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.