சென்னை ஐஐடி-யில் ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு விதிமீறல் – RTI தகவல்

பரவிய செய்தி

சென்னை ஐஐடி-யில் பேராசிரியர், துணை பேராசிரியர், இணை பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரப்பப்பட்ட முறையில் இடஒதுக்கீடு முறையின்றி விதிமீறல் நடந்து உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

ஜூன் 2019 நிலவரப்படி சென்னை ஐஐடி-யில் மொத்தம் இருந்த 900 பணியிடங்களில் 684 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இதில், பல்கலைகழகத்தில் 12.4% பேர் மட்டுமே இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டவர்களில் 684 பேர்களில் 599 பேர் பொது பிரிவினைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.

சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரும், ஆர்வலருமான இ.முரளிதரன் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பி இருந்த கேள்விக்கு அளிக்கப்பட்ட தகவலில் ” 2014 ” முதல் தற்பொழுது வரை உள்ள பணி நியமனம் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டன.

Advertisement

ஆர்.டி.ஐ தகவலில், ” காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஓ.பி.சி பிரிவில் 66 பேர், எஸ்.சி பிரிவில் 16 பேர், எஸ்.டி பிரிவில் 3 பேர் மட்டுமே உள்ளனர். 2019-ல் வேலைக்காக விண்ணப்பித்த(எஸ்.டி, எஸ்.சி. ஓ.பி.சி பிரிவு) 271 பேரில் 5 பேர் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டு 2 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 2018-ல் விண்ணப்பித்த 682 பேரில் 16 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளன ” என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நியமிக்கப்பட்ட பேராசிரியர்களின், 154 இடங்கள் கொண்ட ஓ.சி(பொது பிரிவு) பிரிவில் 273 பேரும், 84 இடங்கள் கொண்ட ஓ.பி.சி இடங்களில் 29 பேரும், 47 இடங்கள் கொண்ட எஸ்.சி பிரிவில் 5 பேரும், 23 இடங்கள் கொண்ட எஸ்.டி பிரிவில் 1 பேர் மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று புவனேஷ்வரில் உள்ள ஐஐடியில் நியமிக்கப்பட்ட 52 துணை பேராசிரியர்களில் 3 பேர் ஓ.பி.சி பிரிவினர் மற்றும் ஒருவர் மட்டுமே எஸ்.சி பிரிவினர் என ஆர்.டி.ஐ தகவலில் கிடைத்ததாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

இடஒதுக்கீடு விதிமுறையின்படி, பின்தங்கிய வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 49.5% இடங்களில் ஓபிசி பிரிவுக்கு 27%, எஸ்.ஐ பிரிவுக்கு 15% , எஸ்.டி பிரிவுக்கு 7.5% உள்ளன.

Advertisement

அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி-யில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே இடஒதுக்கீட்டின்படி தேர்வான ஆசிரியர்கள் இருப்பதாக தெரிகிறது. நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி-யில் இருக்கும் 6,043 ஆசிரியர்களில் எஸ்.பி பிரிவினர் 149 பேர், எஸ்.டி பிரிவினர் 21 பேர் மட்டுமே.

ஜனவரியில் கல்வி அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ஐஐடி-யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஆரம்பக்கட்ட நியமனங்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு பொருந்தும் என தெரிவித்து இருந்தார்.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close