மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளையால் கிடைக்கும் உதவி என ஃபார்வர்டு வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இலவச கல்வி அறக்கட்டளை ஒன்றை துவங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தாய், தந்தையரை இழந்த மாணவர்களுக்கு என பிரிவு வாரியாக கல்விக் கட்டணம் உள்ளிட்ட தேவைகளுக்கு உதவுவதாக நீண்ட செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் ஃபார்வர்டு செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மாணவர்களுக்காக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.
@mafoikprajan SUCCESS கல்வி அறகட்டளை 9962814432.மக்களின் கல்வி அமைச்சர் மஃபா அவர்களின் அறக்கட்டளை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி பயிற்சி
— SHAJI KANNAN (@SHAJIKANNANKK) March 4, 2017
அதில் உள்ள தொலைபேசி எண்ணை கொண்டு தேடுகையில் கடந்த 2017-ம் ஆண்டிலேயே இப்படியொரு தகவல் பரவி இருக்கிறது. ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுவதாக பொய்யான ஃபார்வர்டு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது முதல்முறை அல்ல.
அதுமட்டுமின்றி, மாஃபா பாண்டியராஜன் தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், பரப்பப்படும் ஃபார்வர்டு தகவல் பொய்யானது என மறுத்து பதிவிட்டு இருக்கிறார். ஃபார்வர்டு தகவல் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதை பகிர வேண்டாம் என மாஃபா அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்களுக்கு உதவி கிடைப்பதாக பொய்யான ஃபார்வர்டு தகவல்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.