மங்கோலியாவிற்கு ஆடுகள் விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறதா ?

பரவிய செய்தி
சீமான் ஆடு வளர்ப்பு அரசுப்பணி என்பதை கிண்டல் செய்பவர்கள். ஆடு வளர்ப்புக்கு மங்கோலியா நாடு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாரீர்.
மதிப்பீடு
சுருக்கம்
மந்தைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து இன்னர் மங்கோலியாவிற்கு ஆகாய விமானத்தின் மூலம் செம்மறி ஆடுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஆனால், விமானத்தில் செம்மறியாடுகள் இருக்கும் படங்கள் டிஜிட்டல் மாதிரி படங்களே.
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மேடைப் பேச்சுகளில் ஆடு, மாடு வளர்ப்பை அரசுப் பணியாக கொண்டு வருவோம் எனக் கூறி இருப்பார். அதனை மேற்கோள்காட்டி ஒரு பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர். அதில், மங்கோலியா அரசு ஆடுவளர்ப்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாருங்கள் என்று விமானத்தில் ஆடுகள் ஏறும் படத்தை பகிர்ந்து இருப்பர்.
2015 ஆகஸ்ட் 14-ம் தேதி Farmonline எனும் இணையதளத்தில் தற்போது பகிரும் படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், இன்னர் மங்கோலியாவிற்கு ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து செம்மறி ஆடுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக குறிப்பிட்டு உள்ளனர். இன்னர் மங்கோலியா சீனாவிற்கு உட்பட நிலப்பரப்பில் தன்னிச்சையாக இயங்கும் மாகாணமாகும். இந்த மாகாணம் மங்கோலியா நாட்டிற்கு அருகில் அமைந்து இருக்கும்.
” ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள செம்மறியாடு வளர்ப்பவர்கள், இன்னர் மங்கோலியாவில் மந்தை இனப்பெருக்கத்தை அதிகரிக்க சீனாவில் உள்ள மாகாணத்திற்கு விமானம் மூலம் செம்மறியாடுகளை ஏற்றுமதி செய்து உதவி உள்ளனர் ”
Elder Live Export மூலம் இன்னர் மங்கோலியாவிற்கு 2015 ஆம் ஆண்டில் 9500 செம்மறியாடுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஒரு ஏற்றுமதி பயணத்தில் மட்டும் 5300 செம்மறியாடுகளை ஏற்றுமதி செய்துள்ளார்.
ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அயல்நாட்டிற்கு உயிருடன் செம்மறியாடுகளை ஏற்றுமதி செய்வதோடு, உள்நாட்டில் அவற்றின் மாமிசத்தையும் விற்பனை செய்து வருகின்றனர். சீன சந்தையில் செம்மறியாட்டு கறி தயாரிப்புகளின் உள்ளூர் உற்பத்தியை விரிவாக்க அனுப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளன.
சீன மாகாணத்திற்கு கொண்டு செல்லப்படும் செம்மறியாடுகள் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், தமிழில் பதிவிடும் படத்தில் உள்ளது போன்று ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. Farmonline தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட இப்படத்தின் கீழே, டிஜிட்டல் மூலம் மாற்றப்பட்ட படம் ஏற்றுமதி செய்யப்படும் சரியான முறையல்ல, எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
அசைவம் உண்பது உலகம் முழுவதும் அதிகரித்து விட்டது. தினந்தோறும் அசைவம் சாப்பிட விரும்புவதால் அவற்றிற்கான தேவையும் அதிகம் உள்ளது. எனவே, சந்தையில் விற்பனைக்கு ஏற்றவாறு உற்பத்தியை பெருக்க ஏற்றுமதி செய்வதை இன்னர் மங்கோலியா நாட்டில் செயல்படுத்தி வருகின்றனர்.